வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

திருமூலர் அருளிய

திருமந்திரம்

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. 4

திருமந்திரம் > முதல் தந்திரம் > 13 அரசாட்சி முறை .(.இராச தோடம்.). > பாடல்: 241

If Brahmins, from folly unredeemed, flaunt the tuft and thread,
That land droops and fades, its ruler's glory runs to waste;
So, scanning deep in Wisdom's light, the King shall clip
The thread and tuft for empty show kept and possessed.

Prev | Next Random | Next

தேடுக - Search

அறியாமை கெடாதவர் சிகை, பூணூல் முதலிய வேடங்களைக் கொண்டால் மண்ணுலகத்தில் உள்ளவர் வாடுவர். அரசன் பெருமை இல்லாதவன் ஆவான்.  ஆதலால் வேடத்தின் உண்மையை ஆராய்ந்து அறிந்து ஆடம்பரமாக அணியும் பூணூலையும் சிகையையும் களைந்து விடுதல் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.
Page renders every minutes

முன்