வருக, வணக்கம் !

தமிழ் செய்வோம்

 

 

அருணந்தி சிவாச்சாரியார் அருளிய

இருபாஃ இருபது

மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர 
வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என் 
உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி 
காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன் 
உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் 
பாதாள சத்தி பரியந்தம் ஆக 
ஓதி உணர்ந்த யானே ஏக 
முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும் 
புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி 
ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப் 
போக்கு வரவு புரிந்தனன் தூக்கி 
எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும் 
செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும் 
ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும் 
இல்லது இலதாய் உள்ளது உளது எனும் 
சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச் 
சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி 
யானை எறும்பின் ஆனது போல் எனில் 
ஞானம் அன்று அவை காய வாழ்க்கை 
மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று 
விட்ட குறையின் அறிந்து தொன்று 
தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட 
பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும் 
உரியது நினக்கே உண்மை, பெரியோய்! 
எனக்கு இன்று ஆகும் என்றும் 
மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே 

இருபாஃ இருபது > பாடல்: 6

Prev | Next Random | Next

தேடுக - Search


Page renders every minutes

முன்