நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படைமாலை மார்ப! நூலறி புலவி!செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! மங்கையர் கணவ! மைந்தர் ஏறே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக! நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! . . . .270 திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 27 |