TAMILSEI.COM

05. திருச்சதகம் – (1) மெய் உணர்தல் – Realization of Truth – Thiruvaasagam – திருவாசகம்

05. திருச்சதகம் – (1) மெய் உணர்தல் – Realization of Truth

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. (1)

My body trembles with exhilaration, my hands are folded above my head in veneration of your fragrant feet. My eyes weep while my soul melts. My heart wants to discard this false life and praise you with the words, “Saya Saya Potri”. I will not release my hands until you, the One who owns me cast your glance on me,

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே (2)

I will not accept the rich life of Lord Indra, Vishnu or Brahma even if my life is ruined. I will not seek the friendship of others than your devotees. I will not resist entering hell if that be your wish. Oh my lord, I will not even think of any other god except you, the virtuous one!

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. (3)

Oh the faultless one! My father! My keeper! With my mind focussed on your divine feet, I wander from village to village in an ecstatic and joyous state and speak out my mind. Those who see me think that I am insane and exchange words with each other that I have lost my sanity. When will death take me away from these people?

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. (4)

The two (Brahma and Thirumal) who ate the flesh offered at the feast by Thakkan are like us because they ran away with fear of punishment. They ran to our Lord crying “Our father”, when they saw the poison that was churned from the milky sea. Are they worthy to be associated with our Lord and be called ‘Moovar’. They arrogantly call themselves rulers in heaven and Devas on earth. What a sin!

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. (5)

I have not performed any penance or prayed by offering flowers at your feet. This sinner’s birth is of no value. I have not received the blessings that your devotees have received. Please offer this slave your blessings to change my life so that I can attain peace under your feet, Oh supreme lord!

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. (6)

Your devotees visit various temples and place flowers at your feet with the belief that you will grant them their wishes. You do not hide away but appear in their presence to grant them their wishes. Please bestow that grace of your feet on me too so that I can sing your praises forever.

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்த்து முன்னாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே (7)

Oh Lord! While Thirumal who created the creator (Brahman) went with flowers in search of you, you had been hiding from him. But you danced like a destitute with demons in the cremation ground wearing the skin of the tiger for us all to see.

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்
இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே. (8)

When will the time come when the five elements, wind, fire, water, earth and sky cease to exist? When that happens you are the one who can create them all again. You are the one who can protect us from the sins of our past.

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரிசுஆவ தியம்புகவே. (9)

Bhavan is my Lord. He who wears the crescent moon is also the lord of the celestial. Sivan who is my master has accepted me as his servant, though he knows of my evil past. He is my master and I am his servant. This quality is the one which speaks of his greatness to this world.

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல் லாமணியே
தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. (10)

Oh my faultless gem! I am not worthy of entering among your hordes of devotees. Oh the ambrosia! By accepting me as one of your devotees, you have raised the status of the wicked and lowered that of the celestials. What a drama that you, my Lord performs. It is just laughable!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows