TAMILSEI.COM

05. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom – Thiruvaasagam – திருவாசகம்

05. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. (1)

Oh my master! I am acting as in a drama and pretending to be one of your devotees. I am hurrying for the bliss that only your true devotees can achieve. Oh the mountain of riches! Please bless me so that my mind will have ceaseless love for you and melt whenever you are present in its thought.

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. (2)

Oh my Lord Siva adorned with nectar bearing ‘Konrai’ flowers! I am not fearful of births and what can death do to me! I will not accept even the heaven if offered and I do not attach any value to ruling this earth. All that I suffer is the longing as to when I shall receive your blessings.

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. (3)

I, who is lesser than a dog pine to see your flowery feet. I do not adorn you with garlands of flowers or praise you until my tongue is swollen. If you who used the golden mountain as a bow do not offer me your grace, then there is nothing I can do but suffer alone. What else can I do?

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே. (4)

My heart does not pine to reach your feet, nor does it melt with love for you. I do not offer you garlands of flowers. I do not sing your praises. I do not sweep or clean your temples. I do not dance with piety. I am only hastening my death by my behaviour. Oh the Lord of dance!.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. (5)

You take the form of the sky, the earth, the wind, the fire, the body, the soul, the truth, the false. You are the king who makes others dance with illusion saying, “It is me and mine”. What words can I use to describe your glory?

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. (6)

Oh my Lord adorned with garlands of flowers that hums with the buzzing bees! The Devas praise you so that they can have a heavenly life. They think about you in order to raise their status so that others will worship them. But I, a lesser life than a dog worship you so that you will severe my attachments to this earthly life.

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. (7)

The Devas worship you! The four Vedas sing your praises! The fragrant long haired mother has taken half your body! The devotees keep gathering in large numbers and worship you. But will they see your anklets that make sweet sound?

அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. (8)

Oh the one rarely seen! The one above all others! The dancer at Chidambaram. You have accepted me under your feet. I have not offered any flowers to it or shouted in awe at your greatness. My heart did not melt at your kindness. I will not remain like this. So when will I die and please let me die!

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. (9)

Oh my mind! How you yearn for the flowery arrow of the cupid of love, to the bright white smile of the damsels and to their moist lips! The one who has entered my heart and made my body melt by his presence, has left me now for heaven. Why is that you are still living without embracing death?

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. (10)

Oh my soul! You are living a false life. You are immersing yourself in life’s miseries. You are not praising the one who can protect you from such miseries. I tell you how you have surrounded yourself with evil and fallen into this sea of misery.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows