TAMILSEI.COM

05. திருச்சதகம் – (4) ஆத்ம சுத்தி – Purification of the soul – Thiruvaasagam – திருவாசகம்

05. திருச்சதகம் – (4) ஆத்ம சுத்தி – Purification of the soul

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? (1)

Oh my soul! You do not dance with joy at His memory! You do not love the feet of the dancer at Thillai.You do not sing His praises with love that melts the bones, do not tremble in fear, do not bow down to His feet, do not place His feet on your head, or do not offer flowers to it. Oh you lonely lifeless soul! You do not wander on to the street and shout and search for Him. I do not know what I can do with you!

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப்
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. (2)

He entered me and took me over, ruled me and taught me what needed to be learnt and offered me the wisdom to understand the higher truth. This was done by my Sire who severs the bonds of life. Oh my lifeless soul! Though you have the wisdom to understand all these, still you rejected them. By your actions you have reduced me into a degraded life in order to ruin me.

மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மதி இலிமட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெச் சிவன் அவன் திரள் தோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. (3)

Oh my ignorant mind! You always work against me in order to make me weak. I will not trust such a weak mind. Though you have seen the holy ash on the rounded strong shoulders of our Sivan, your heart does not melt. You do not wish to give up this body. Your nature has driven me to ruin. I am unable to bear this. What shall I do?

கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர்த் திருப் பாதம்
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. (4)

Oh the mind that seeks to enjoy all pleasures! You will perish! My God who owns me has the right to sell me and rule me. Though the pleasures that you enjoyed while being away from His young tender shoots like feet are all lost now, your wisdom or greatness are still unfathomable!

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. (5)

He is beyond understanding by heavenly beings yet simple to His devotees. Though you realise that He has made you His slave by removing all evil thoughts from your mind, still you have failed to create a space for Him in your heart. You have failed to bow to his feet and give up all your evil thoughts. Still you expect to enter His house of bliss!

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்கு
உகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்கு என்செய்கேன் வினையேனே. (6)

The kingdom of our Lord is the one where all wish to enter and it is from where no one wishes to leave. I am suitable to enter that kingdom only if the love for my father, my Lord, my king melts my heart or thoughts of Him give me the pleasure of tasting nectar, honey and milk. But I do not experience any of these feelings. What can this sinful man do?

வினையென் போலுடை யார்பிறர் ஆர்உடை யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான் முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னதென் றறியேனே. (7)

Who else is there like me, a sinner low like a dog? It is not my Lord’s wish to be separated from me even for a fraction of a second. But I who stayed away from the flowery feet of the primal one, have not banged my body or scratched my head. That is because my heart is hard like iron and my mind is like stone and I do not know what my hearing is like!

ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயிர் ஓயாதே. (8)

All the other devotees who have reached Him do not understand His nature. He is sweet to me like honey, ghee and sugar cane juice. I stayed too long away from my Sivan, the ruler of ‘Sivalokam’ the one who has the fawn eyed maiden as part of His body. Yet I still remain in this body of flesh. When will this life end?

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. (9)

He offered me, who is worse than a dog, His incomparable flowery feet and showed me the path to salvation. He gave me the love of a mother. Yet I did not return that love to my leader by worshiping Him more. For this lapse I have not fallen into a fire or rolled from the top of a hill. Shall I enter the deep sea?

வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. (10)

Oh Lord, I am a sinner who did not think about your holy feet. I suffered the piercings of Cupid’s arrows. The moon in the sky felt hot to me. Having been caught by the fawn like looks of maidens, my heart felt like being churned in a pot for curd. I rejected the chance to enter your kingdom. But then I tried to preserve this soul in this body by feeding and clothing it. It was not worthy of me.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows