TAMILSEI.COM

05. திருச்சதகம் – (5) கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude – Thiruvaasagam – திருவாசகம்

05. திருச்சதகம் – (5) கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. (1)

Oh the Lord of heavenly beings! I was arrogant like an elephant with two trunks. I did not realise your presence in my heart. I led a life of pain. Then you ordered me to come to you and offered me your grace. But I was incapable of enjoying that grace and lost my chance.

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே. (2)

Those who believed that there was a supreme being could not decide whether you are a man, women or sexless. But you came and appeared before me, your servant. Before I could see you properly, you disappeared. Was it some tricks that my eyes were playing?

மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை என்றுகொல் காண்பதே. (3)

Oh the dancer who enslaved me! You are the form that even the celestial beings do not understand. You are the earth, the sky and the changing climate. When am I going to see you?

காண லாம்பர மேகட்கு இறந்ததோர்
வாணி லாப் பொரு ளேஇங்கோர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன் புலன் போற்றியே. (4)

Oh my Lord! You can only be seen by those with higher wisdom. You are the light that cannot be seen by the faulty human eyes. I do not know how to break away from this nest and reach you, because I waste my life satisfying the needs of my senses.

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று
ஆற்றல் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறும்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. (5)

I did not pray to you shouting your glory, nor did I roll on the floor to pay obeisance, I did not sing your praises. I have not shown any love towards you. My position is like that of the Lord of Death who opposed you but later surrendered to your lotus feet.

கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளும் கீழளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. (6)

Oh my Lord who wears the Konrai flowers buzzing with bees for its nectar! You are like the oil in a seed filling everything, on the top, in the middle and in the bottom. When will you take me this sinner too as one of your devotees?

எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான்
முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. (7)

Though He, my father and my Lord remains as the father and the mother to others but He himself has none of these. But He who is not even known by others had entered my soul and had taken over me.

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. (8)

You are rare to be reached by everybody irrespective of their wealth or poverty, whether they are heavenly dwellers or lowly worms and grass. But though I found out that your feet have limitless power, I still stayed away from them. How can I describe the grief this man with a stony-heart had endured.

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும் அறி யேனையே. (9)

Oh my Lord! You severed my worldly bonds and took over me. You made others watch this ignorant one who could not add two and eight together, to climb on the stage as equal to your devotees who wore holy ash abundantly. What can I say about your grace.

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே. (10)

Oh the wise one! Oh the nectar. You blessed me and took me as if I was a wise man. But you found me ignorant. Please tell me Oh Lord. Am I now knowledgeable of the truth or not?

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows