TAMILSEI.COM |
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. (1)
Sankara, I praise thee! The ancient one, I praise thee! The young one, I praise thee! The unique one, I praise thee! God of gods, I praise thee! The dancer at Thillai, I praise thee! The purest one, I praise thee! I do not want to continue in this earthly life!
போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. (2)
I praise thee who is represented by the word Namasivaya! Oh wearer of snakes, I am caught in my sensory pleasures. I have nowhere else to seek refuge. Do not push me away, I praise thee! I praise you by chanting the words ‘Saya Saya Potri’
போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றுஇய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. (3)
Oh Lord, You are the one who redeems pretenders like myself, I praise thee! I praise your gracious feet! Oh the Chief, I praise thee! I praise your kindness that flows like a flood! You the one who become the earth, the water, the fire, the wind, the sky, the moon and the sun, I praise thee.
கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. (4)
I praise thee Oh Lord! Redeem me with your grace, I praise thee! Make my heart melt to give up these worldly attachments so that you can give me redemption. Please help me to get rid of this body and give me a place under your feet. Oh praise be to the one who has river Ganges in the crown of his hair. Praise to Thee! Praise to Thee!
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி
இங்குஇவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. (5)
Oh Sankara, praise to thee! I have no other refuge but you, Praise to thee! You have as your half the maiden who has a beautiful form with reddish mouth, gleaming white smile and blackened eyes in the shape of a sword, Praise to you! Praise to the one who has a bull as his mount! I am unable to continue this life on this earth. Oh my god, I have renounced everything!
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட்டு எம்பி ரானே. (6)
I have even renounced myself, Oh Lord, praise to thee! I have not spoken ill of you. Praise to the feet which give me salvation. It is the duty of the noble to pardon the mistakes of the lesser ones. Oh the king of heaven, please pardon my mistakes and release me from this earthly life, praise to thee!
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. (7)
Oh my Lord praise to thee! The king of all the heavenly dwellers, praise to thee! The one who has the maiden with frail waist as his half, praise to thee! Praise to the one who has holy ash smeared on his body! Praise to the one with the reddish body! Praise to the dancer at Thillai! Praise to the supreme one! Praise to the one who can grant me salvation!
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருவஎன் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. (8)
Praise to the only one! Praise to the incomparable one! Praise to the teacher of the heavenly dwellers! Praise to the one who is young forever. Grant me your gracious feet and invite me and take me unto you so as to rid me of my loneliness, Praise to thee!
தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. (9)
Praise to the Lord who loves His devotees more than they love Him! Praise to the one who has given me refuge in spite of my pretence that I am His devotee! Praise to the great benefactor who gave ambrosia to the Devas while He swallowed the poison Himself! Please grant your grace to this dog like soul to reach your feet, praise is to thee!
போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்
போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாயீ றின்மை யானாய்
போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. (10)
Praise to the one who becomes the five elements of the universe, earth, water, fire, wind and space! Praise to the one who is the beginning and end of all living things but who has no beginning or end himself. Praise to the one who is beyond the realisation of the five senses.
திருச்சிற்றம்பலம்