TAMILSEI.COM

10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi – Thiruvaasagam – திருவாசகம்

10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi

சிவனோடு ஐக்கியம் – Merging with God.

(Thumbi in Tamil is a dragon fly. The verses are constructed with the last line of each verse requesting a blowing (or humming) by Ko-thumbi (the king of dragon flies.)

பூஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நாஏறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
மாஏறு சோதியும் வானவரும் தாமறியாச்
சேஏறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (1)

O Ko-thumbi! Brahma who is seated on a (lotus) flower, Lord Indiran, the beautiful Saraswathy who resides in the tongues of the learned, Lord Narayanan, the four Vedic scriptures, the glorious fire and the celestials. All had not been able to see the roseate feet of our Lord, mounted on a bull. Go and hum your song at our Lord’s roseate feet

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. (2)

O Ko-thumbi! If the lord of the celestials had not enslaved me in a state of confusion, who will I be, what will be the state of my mind or spiritual knowledge and who will recognise me? Go to the lotus feet of the Lord of Ambalam, the one who seeks alms with a flesh stuck skull and hum your song.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (3)

O! Ko-thumbi! Do not take honey from the small millet sized flower. Go to the one who makes our bones melt and gives pleasure that pours like honey, whenever we think of Him, see Him and speak about Him. Go to Him, the dancer and hum to Him.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்து என்னை வாவென்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (4)

O! Ko-thumbi! Though He did not find in me the love for Him comparable to that of Kannappan, still He, my father enslaved me and showed His immense grace by bidding me to come to Him. Go to Him who uses fragrant gold dust (Potsunnam) for bathing and hum to Him.

அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. (5)

On this earth where people speak of false gods and rave and rant saying that the real god is their god. O Ko-thumbi! Go and hum over the real god on whom I attach myself so that He can sever all my bondage in this world.

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. (6)

O! Ko-thumbi! Go and hum over the all knowing god who has clarified our confused mind about life and death and who has calmed the madness of this world that is concerned about accumulated wealth, women, off-springs, creed and learning etc.

சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (7)

Will I, the one with low morals, give up the memory of lord Sankaran that gives me the sweetness of nectar. We do not recognise those who do not attach themselves to His sacred feet. O Ko-thumbi! Go and hum over the one who is supreme to all others.

ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்அனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (8)

Our Lord appeared as a single entity and then took many forms. He elevated me from a low life to a higher level. He is my father and lord of my father and all others. He is the treasure that does not diminish. O Ko-thumbi! Go and hum over Him.

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென்ற இவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (9)

Our lord with the darkened throat stands beyond all human perceptions. When I took refuge under His feet, my delusion about birth and death was dispelled. O Ko-thumbi! Go and hum to this sea of mercy.

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா இங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (10)

O Ko-thumbi! I was lonely like a calf rejected by its mother as I suffered old age and illness. I was living like a dog without appreciating my fortune, when my Lord came like a loving mother and enslaved me. Go and hum to that radiant, affluent one.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (11)

He did not reject me as a hard hearted thief or one with a stubborn mind but softened my stony heart and enslaved me with mercy. O Ko-thumbi! Go and hum at the golden feet of the ruler of the beautiful Thillai where swans thrive.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (12)

He is the lord who made this low-life to sing praising His feet, the great one who forgives the wrong notions in my wretched mind, the one who accepts my services without any contempt, the one who offers His grace like a mother. O Ko-thumbi! Go and hum at such a lord.

நான்தனக் கன்பின்னை நானும்தா னும் அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றுஏது ஆனவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. (13)

He and I knew the lack of my love for Him. But all are aware that He had enslaved me and that He was the source of mercy that was shown to me. O Ko-thumbi! Go and hum coolly so that my king will take me into His realm and unite with me.

கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. (14)

My lord is the source of everything and also transcends beyond this world. But He appeared on this world as a learned sage versed in Vedas with His consort who has fragrant, flowery locks of hair and offered salvation and enslaved me. O Ko-thumbi! Go and hum to that opulent deity.

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ (15)

How far away from my Lord, my thoughts and I would be if the Lord with the flowing locks of hair and His consort had not enslaved me and ruled me. He becomes the sky, the directions and the vast sea too. O Ko-thumbi! Go and hum over His sweet reddish feet.

உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (16)

I am thinking of His sacred form which is beyond comprehension. My Lord whose mercy is like a flood from heaven that gives pure joy. He is my Lord. He is the one who has enslaved me. O Ko-thumbi! Go and hum at Him.

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (17)

Oh Lord! You redeemed me when I had immersed myself daily in the false wealth mistaking it for true wealth. O Sire! O my precious life! Lord of Ambalam! Thus I call Him. O Ko-thumbi! Go and hum at His flowery feet.

தோலும் துகிலுங் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. (18)

He wears (taking the form of half-man and half-woman) skins on one side and soft cloth on the other; pendant on one ear and a ring on the other; milky white holy ash on one side and sandal paste on the other; a trident on one hand and a parakeet on the other and bracelets on the fore-arm. O Ko-thumbi! Lay your eyes on this attire and hum your cool buzzing.

கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (19)

O Ko-thumbi! My Lord did not say that I was a thief, a vile one or a contemptible one but instead entered and filled my heart gradually and removed all my sorrows completely. He thus filled me with joy. Go and hum at His anklets adorned feet.

பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. (20)

O Ko-thumbi! While Lord Brahman, the one who sits on the lotus flower and Lord Thirumal were disappointed that they could not describe Him, I, this low life of a dog was given pride of place thus making me gloat. Go and hum at the Lord whose body glows like fire.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows