TAMILSEI.COM |
பாசம் நீக்குதல் – Renunciation of attachments
‘Poovalli’ was a game played by young women those days while singing songs . Sage Manikkavasakar was attracted by the rhythm and beauty of these songs sung during the games that he constructed his verses to reflect them in rhythm. Each verse ends with a request to other members of the play group to ‘pluck the lily flowers’.
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 1
Dear friends! When He placed His incomparable feet on my head, I banished all my attachments towards my relatives who were around me. Our Lord, who dances at the court of Thillai, is the boatman who can take us across the sea of life. Let us sing His glory and play the game of poovalli.
எந்தைஎந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 2
My Lord of Pandya land enslaved me by severing my attachments to my father, my mother and others related to me. Our Lord dwells at Idaimaruthur which is like a recessed hole filled with honeyed bliss. Let us sing its praises and play the game of poovalli.
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதும் தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடிஅட்டிப் பூவல்லி கொய்யாமோ. 3
Our Lord considered me, who is worse than a dog, as worthy of His compassion which is greater than that of a mother and liberated me from being born again and enslaved me. He rendered my past sins ineffective. Let us play the game of poovalli.
பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 4
Dakshan, the Sun-god, Echchan, the Moon-god, the Fire-god did not honour the Lord of the reputable city of Thillai. Sing how they were wounded by the army of demons that filled the sky headed by Veerabadhra and play the game of poovalli.
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
நானாடி ஆடிநின்று ஓலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 5
Our Lord Sivan who wears honey bearing Konrai flowers in His hair, came seeking my body and entered me in front of the people of this world, which made me stagger, wobble and wail in delight. Let us sing for the dancer who is the ruler of the celestials and play the game of poovalli.
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன்று அறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 6
Our Lord, took pity on the three Devas, the Fire, the Sun and the Moon and showed them His grace. He severed their heads by squeezing His eye brows to show His anger at them. He then took their forms and remained beyond our comprehension. He burnt the three citadels of the celestials about which we will sing and play poovalli.
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்கத்தான் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 7
Our Lord gave us our heads to bow at Him, our mouths to praise His anklets adorned feet, and the hordes of glorious devotees for us to accept them. Let us sing to His habit of dancing at the court of Thillai with His consort and play poovalli.
நெறிசெய் தருளித்தன் சீரடியர் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 8
He offered me His grace and directed me to serve the golden feet of His devotees and enslaved me and showed me the moral path. He removed the effects of our old sins that were following us as if bound to them. Let us sing to all these and play poovalli.
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நார் உரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 9
He is great and He placed His flowery feet in my heart so that I can continue to serve Him for very many days to come. He, a glorious flame has enslaved me, an unlikely act like peeling fibres from a stone. Let us sing to His golden two feet and play poovalli.
பேராசை யாமிந்தப் பிண்டம் அறப் பெருந்துறையான்
சீரார் திருவடி என் தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 10
The Lord of Perunthurai placed His glorious feet on my head so that this body full of avarice could be brought to an end. He is the Kabali who enjoyed eating the poison from the sea and was victorious against his foes. Let us sing about these and play poovalli.
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 11
Our Lord is the supreme one giving pleasure like a mixture of milk, nectar and honey. He has filled my heart with His cool appearance. His glorious feet show the path to everyone on this earth to the superior moral code. Let us sing the praises of those codes and play poovalli.
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுது செய்யப்
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 12
To the Lords Indran, Thirumal and other celestials, He remains the king but with attributes those are beyond their reach. He took the Aalahala poison that rose from the vast sea as His divine food. Let us sing to that and play poovalli.
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 13
One day, He revealed the essence of the four Vedic scriptures under the shade of the Banyan tree. He bears those perfect feet which are worshiped daily by the heavenly beings and great saints. Let us praise the golden pollens of the Konrai flowers that He wears and play poovalli.
படமாக என்னுள்ளே தன்இணைப்போ தவையளித்திங்கு
இடமாகக் கொண்டிருந்த ஏகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 14
He offered His two flowery feet to be etched in my mind like a picture and made it His home. Yet He presents Himself at the temple in Ehambam and also performs His dances at the court in Thillai which is surrounded by thick walls. Let us sing to all these and play poovalli.
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செங்கண் அரிஅயன் இந்திரனும் சந்திரனும்
பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 15
Our Lord rose in anger and scarred the bodies of Lord of Fire, Sun, Ravanan, Yaman, Kootran, Red eyed Hari, Brahman, Indran, Chandran, Dakshan and Echchan. Let us sing to this deed and play poovalli.
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 16
Our Lord rides a bull that is strong in battle. In war He is like a lion in protecting those living in Sivapuram. He carried earth in Madurai and ate the piddu given to Him as His wage and granted blessings to the old lady. When the Pandyan King put Him to work by striking Him with a cane, He remained wounded. Let us sing to all these events and play poovalli.
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
என்ஆகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 17
The primary celestials, Thirumal and Brahman, other heavenly dwellers and Asuras have not seen the sacred golden feet of our Lord. But He has entered my heart and has enslaved me. Let us sing praising His ornaments, the snakes and play poovalli.
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 18
I have an insatiable desire to hear the sound of our Lord’s anklets. The Lord of Perunthurai, which has streets filled with chariots, danced for me which gave me immense pleasure. Let us sing to that and play poovalli.
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதல்உத் தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 19
Our Lord of Perunthurai had peeled off the skin of an elephant and covered Himself with it. He had taken the form of a mad man. He had become a child. He is the source of heavenly bliss who grants blessings from Uththarakosamangai. He is the one who enters our conscience. Let us play poovalli.
மாவார ஏறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 20
Lord of Perunthurai entered the city of Madurai gloriously riding a horse. He became our ruler and made us perform small tasks and offered us His grace. Let us sing the praises of His flowery feet and play poovalli.
திருச்சிற்றம்பலம்