TAMILSEI.COM

14. திருவுந்தியார் – Thiruvunthiyaar – Thiruvaasagam – திருவாசகம்

14. திருவுந்தியார் – Thiruvunthiyaar

ஞான வெற்றி – Spiritual Triumph

(It is believed that ‘Flying Unthi’ is a type of game played among young maidens. A ball or an object like a shuttle cock is thrown between opposing groups. Manikkavasagar has adopted this theme and constructed the verses as if one group makes a statement ending with the request to ‘Fly Unthi’ and it is sent back with an answer from the opposing side with the shout ‘Fly Unthi’.)

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. (1)

The bow was bent, arose the discord and the three citadels perished, fly unthi!
They burnt all together, fly unthi!

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற. (2)

We did not see two arrows in our Lord Ehambar’s hands. Three citadels (He destroyed) with one arrow, fly unthi!
Even that was one too many, fly unthi!

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற. (3)

The chariot was made ready and when He placed His foot on it, the axle broke, fly unthi!
Yet the three citadels perished, fly unthi!

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற. (4)

He saved the three who deserved to be saved and placed them as His guardsmen, fly unthi!
He shares his body with the soft breasted goddess, fly unthi!

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற. (5)

Sing how the celestials ran away when the sacrifice by Thakshan was attacked (by Veerabadra) and fly unthi!
To the Lord of Rudras, fly unthi!

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற. (6)

Say that Thirumal ate his portion of the sacrificial offering and still survived because of our Lord’s grace. Fly unthi!
Say that He is father of the Four faced Brahman. Fly unthi!

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. (7)

When the lord of fire picked the sacrificial offerings, his hands were severed. Say that and fly unthi!
Thus the sacrifice was prevented. Say so and fly unthi!

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற. (8)

Why does our Lord look at Thakshan with mercy, who showed enmity towards Goddess Parvathy? Fly unthi!
Fly unthi for the one who gave his half to the full breasted maiden!

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற. (9)

Indran became a pretty cuckoo bird and climbed a tree to escape. Fly unthi!
Call him the King of the heavenly dwellers and fly unthi!

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற. (10)

Sing how the leader of the sacrifice, Viyathiran’s head was severed and fly unthi!
Fly unthi to severe the continuation of the birth.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. (11)

Sing how He joined a goat’s head as Thakshan’s head and fly unthi!
Fly unthi to make your bosoms wobble!

உண்ணப் புகுந்த பகன் ஒளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. (12)

The eyes of Bhagan who came to eat at the sacrifice were taken out so he could not escape and hide. Fly unthi!
Fly unthi so that we get rid of our cycle of birth.

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற. (13)

The Namagal’s nose and Brahman’s head were removed and the face of Chandran squeezed. Fly unthi!
Fly unthi so that our past sins are got rid of!

நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற. (14)

The head of the sacrifice, versed in the four Vedas was searching for a way to escape. Fly unthi!
Fly unthi to the presence of Indran at the sacrifice!

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. (15)

The teeth in the mouth of Sooriyan were smashed. Fly unthi!
The sacrifice was hindered. Fly unthi!

தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற. (16)

Thakshan lost his head even though he was surrounded by his sons. Fly unthi!
That stopped the sacrifice. Fly unthi!

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற. (17)

Our Lord with the beautiful matted hair gave the sea of milk for the child (Upamanyu). Fly unthi!
Fly unthi to the father of Kumaran!

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற. (18)

The four faced Brahman who sits on the lotus flower had His head severed. Fly unthi!
That was done with His finger-nails. Fly unthi!

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற. (19)

The ten heads of Ravana was severed when he stopped his chariot and tried to uproot the mount (Kailash). Fly unthi!
He lost his twenty arms too. Fly unthi!

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. (20)

Our Lord protects the Rishis called Irudi, who occupy the sky above, from the hot sun. Fly unthi!
He protects everybody even beyond the sky. Fly unthi!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows