TAMILSEI.COM |
பிரபஞ்ச சுத்தி – Cleansing of delusion
(Thozh Nokkum is a game played by young maidens during the days of Manikkavasagar. They are divided into two groups and each side looks at the shoulders of the members of the opposite side and plays this game. As the saint was attracted by the rhyme of the songs, he had used the same style to construct his verses. Each verse ends with the call to play Thozh-nokkam.)
பூத்துஆரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். (1)
You, the dancer in the court of famous Thillai saved me from the folly of chasing after false dreams like going for the mirage thinking that it was a pool with flowering plants. Let us aspire to reach your reddish feet and play thozh-nokkam!
என்றும் பிறந்திறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. (2)
My Lord saved me from sinking into the mire of births and deaths and enslaved me. Even Brahman who hurled a calf at the wood-apple fruit is unable to see our Lord who dances at the Ambalam in glorious Thillai. O maidens with dense tresses of hair, let us praise His glories and play thozh-nokkam!
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. (3)
Our Lord joyously accepted the worship offered by hunter Kannappan with slippered-feet, water from his mouth, and raw flesh as equal to the rituals of worship mentioned in the scriptures. There the Lord blessed him and gave him salvation. Let us sing to that and play thozh-nokkam!
கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால்
நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தான்இங்ஙன்
சொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ. (4)
He, because of His kindness blessed me and entered my heart and made it to soften and melt. He turned me into a good person and made it known to this world for them to speak about it. Let us play thozh-nokkam!
நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகுஏழ் எனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. (5)
Our Lord permeates the earth, water, fire, space, moon, sun and the soul of man He becomes the seven worlds, ten directions and thus He is one who becomes many. Let us play thozh-nokkam!
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. (6)
Many religions like Buddhism are mired in arguments due to their ignorance. But Lord Siva, because of His kindness, entered my mind and made every act I performed as an act of penance. Let us play thozh-nokkam!
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். (7)
The faultless and praiseworthy Sandeesar cut off the two feet of his father for disrupting His ritual worship of Lord Siva. He was released from his blame by the mercy of our Lord which made the celestials to worship him. Let us play thozh-nokkam!
மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
வானம் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
ஆனந்த மாகிநின்று ஆடாமே தோணோக்கம். (8)
O fair ladies! We have lost our dignity and our wisdom because we do not constantly think of the anklet worn feet of our Lord of the south. If we received the blessing of the happy dancer, won’t we from that moment dance in blissful joy? Let us play thozh-nokkam!
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம். (9)
The three Asuras escaped from the burning three citadels and became the guards at the entrance to my Lord’s domain. Since then there had been countless Indras, many Brahmas and Vishnus been born and died on this earth due to lack of our Lord’s blessing. Let us play thozh-nokkam!
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. (10)
When Thirumal found that there was one lotus flower less than a thousand, He gouged His eye and placed it at the feet of Lord Sankaran. Pleased by this devotion, our Lord then gave Vishnu the mighty weapon of Sakkaram (Disc). Let us spread this to all and play thozh-nokkam!
காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன்
நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. (11)
Our Lord made Kaman to lose his body, Yama his life, the Sun his teeth, Kalaimagal her nose, Brahma his head, Agni his hands, Chandran his craft, Dakshan and Echchan their heads in order to purify them of their sins. Play thozh-nokkam!
பிரமன் அரியென் றிருவரும்தம் பேதைமையால்
பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. (12)
Brahma and Vishnu, due to their foolishness quarrelled among themselves as to who was the supreme god. In order to kill their doubt, Aran manifested as a column of fire that was beyond measure thus proving Him to be the supreme God. Let us play thozh-nokkam!
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந்து என்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. (13)
I, this poor devotee had been for a long period of time had been irrigating a barren field by not worshipping the supreme lord like. He is like an indestructible diamond who came down and destroyed the roots of my birth and redeemed me. Let us play thozh-nokkam!
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. (14)
When the virtuous one came and entered me as an indescribable inner light, I was able to cross the limitless sea of desires. This made the lust to leave me like a bird as if there was lack of food for it. Let us sing the praise of the one who caused all these to happen and play thozh-nokkum!
திருச்சிற்றம்பலம்