TAMILSEI.COM

16. திருப்பொன்னூசல் – Thirup Ponnoosal – Thiruvaasagam – திருவாசகம்

16. திருப்பொன்னூசல் – Thirup Ponnoosal

(Singing while seated on a swing and moving it to and fro was a pass-time to young women during Manikkavasagar’s period. He uses the structure of such songs to construct his verses extolling the virtues of Lord Siva. He ends each of his verse with a request to move the swing made of gold thus the name ‘ponoosal’.)

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 1

O damsels, having eyes like battle hardened spears! Let us climb and sit comfortably on the swing made with choicest marble as the posts, pearls strung as the rope and the seat made of gold. Our Lord dwelling in Uththarakosa mangai showed me, this dog like soul, His flowery feet which even Lord Narayanan could not find. Let us sing to the graceful feet of our Ambrosia like Lord and swing the ponnoosal!

மூன்றுஅங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றுஅங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 2

O, you who have the gait of the swans and the look of pea-fouls! Our Lord possesses three bright eyes. His flowery feet had not been seen even by the ageless heavenly dwellers. The feet of our Lord, the King of Uththarakosa mangai are sweet as if they carry honey and nectar and its thought can enter the body and melt the heart. Let us swing the ponnoosal!

முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம் நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்ஊற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்ஏறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்ஏறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 3

O damsels, bearing golden jewelleries adorned bosoms! Our Lord has no beginning and no end. While countless saints and celestial dwellers wait to receive the holy ash from Him, He offered it to me. Let us sing to the glory of the many storied glittering palaces of Uththarakosa mankai born from the flood of His immense mercy and swing the ponnoosal!

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 4

Our Lord has poison in His throat and is the Master of the universe. He resides in Uttarakosa mankai where the towers touch the clouds. Our Lord rests there with His sweet spoken consort and fills the heart of His devotees with nectar like sweetness and offers blessings thus severing the cycle of birth and death. O you maidens wearing bright bracelets, let us sing His glory and swing the ponnoosal!

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 5

He is our Lord who could not be identified as a man, woman or sexless by Lords Ayan and Mal when He manifested as a coloum of flame. He mercifully swallowed the poison as if it was food, in order to save the celestial dwellers from shame. He is the one who is dancing in Uththarakosa mangai with the crescent moon on His head. O you maidens with bejewelled bosoms, let us praise His glory and swing the ponnoosal!

மாதுஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதுஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதுஆடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 6

He has given His half to His consort. He dwells in Uththarakosa mangai wearing pollen laden Konrai flowers on His hair. He selected me, this lowly dog, from among the devotees and redeemed me and removed my past sins thus saving me from being born again. O you damsels with bejewelled bosoms, let us sing with love of His pendants dangling from His ears and swing the ponnoosal!

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும் அணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 7

Our Lord who is the essence of the spiritual teachings dwells in Uththarakosa mankai which has splendour beyond imagination. He removes your sins when you worship Him with devotion. He, my father, came to me like a peacock dancing on the back of a swan and redeemed me. O you damsels with jewels worn bosoms, let us sing to His beauty and swing the ponnoosal!

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 8

He came down from the top of the mountain to this earth and consumed the nectar of people’s love.. He rose from the sea riding a horse like the waves of a sea and enslaved us. He is the possessor of treasure filled Uththarakosa mankai. He is inaccessible even to Lord Thirumal. Let us sing till our mouths get tired and with joy and melting heart to His kindness and swing the ponnoosal!

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 9

To Uththarakosa mankai which is full of coconut groves, He came as a unique glowing light and severed our bonds of birth and enslaved us. He also appeared along with His consort and accepted us as their servants. He is the one with locks of hair adorned with honey dripping Konrai flower. O damsels with jewel adorned bosoms, let us sing to His mercy and swing the ponnoosal!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows