TAMILSEI.COM

17. அன்னைப்பத்து – Annaippathu – Thiruvaasagam – திருவாசகம்

17. அன்னைப்பத்து – Annaip Paththu

ஆத்தும பூரணம் – Attainment of the Soul

(These verses are interpreted in different ways by different scholars. The most commonly accepted one is that Manikkavasagar describes what a young woman who was smitten by the Lord mentions to her mother.)

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும். (1)

“Mother! Vedic scriptures are His language, smears white ash at His reddish body and His drum produces cosmic sound”, said she. “Mother! The one with the drum that produces the cosmic sound is also the Master of Brahma and Indran and He is my Master too”, said she.

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். (2)

“Mother! He has applied dark colour to His eyes, is a sea of mercy and dwells in the heart and melts the soul”, said she. “Mother! He dwells in the heart and melts the soul and makes me cry with blissful tears of joy”, said she.

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும். (3)

“Mother! He is the eternal bridegroom and dwells in the heart of many beautiful women”, said she. “Mother! The one who dwells in my heart is the king of the South, Lord of Perunthurai. He is the one who gives me blissful joy”, said she.

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும். (4)

“He wears a dancing snake as ornament and covers himself with the skin of a tiger and smears His body with ashes. What kind of attire is that, mother?” she asked. “Whenever I see Him in that attire, my soul wilts. Why is that mother?” she asked.

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். (5)

“Mother! He has long arms, matted locks of hair and owns the generous Pandy nadu”, said she. “ He, the owner of generous Pandy nadu has brought my wandering thoughts under His control and shows me kindness, mother!” said she.

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதியசம் அன்னே என்னும். (6)

“Why is the Lord of Uththarakosa-mankai whose glory is beyond imagination resides in my heart, mother?” asked she. “What a miracle that He who could not be seen by either Thirumal or Brahman resides in my heart, mother!” said she.

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். (7)

“He wears white silks and appears with ash smeared white forehead and adorns his sleeping garment, mother”, she said. “He stole my heart arriving on a leaping horse while dressed in a sleeping garment, mother” said she.

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தம்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும். (8)

“He bears the creeper Thazhi and Arukam grass and applies sandal paste on His body and enslaves us, mother” said she. “Why does He, who enslaves us and rules us carries the drum in His hands, mother?”, she asked.

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும். (9)

“He has Goddess Uma as His half, takes the form of a sage and also goes begging for food, mother” said she. “When He goes begging and then moves away from that place, why is that my heart weakens, mother?” she asked.

கொன்றை மதியமும் கூவின மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக்கு ஆனவா றன்னே என்னும் (10)

“His head is adorned with Konrai flowers, the crescent moon and tender Vilva leaves, mother”, said she. “It is the Vilva leaves that He wears on His hair that has caused the madness I suffer. Why is that mother?” she asked.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows