TAMILSEI.COM |
ஆத்தும இரக்கம் – Yearning of the Soul
(These verses were written depicting the longing of a woman for her man who has gone away. She then asks the Kuyil to call Him to come back to her. This is used as a metaphor in which it describes the yearning of the soul to join the Lord. )
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். (1)
O! Kuyil that sings sweet songs, if you ask me about our Lords two feet, I will tell you. They have gone beyond the seven worlds below and if I have to say about His dazzling jewelled crown, there are no words to describe its antiquity. To describe His qualities, I say that He has no beginning and no end. Coo for Him to come!
ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்
பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். (2)
Our Lord at Perunthurai is praised by all those living in the seven worlds. He transforms Himself into every other form. He showed His mercy and offered bliss to the beautiful Vandothary residing in South Ilankai which is surrounded by the noisy sea. O! Kuyil call the master of South Pandy with your beautiful voice by cooing for Him!
நீல உருவின் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். (3)
O, Kuyil of bluish hue! The glorious and wealthy Uththarakosa mankai is where the walls of the long storied buildings are laid with gems and has the temple where our beautiful Goddess Umayal resides. Our Lord who makes the world thrive also lives there. Coo to call Him to come!
தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேஇது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய ஒருத்தன்
மான்பழித் தாண்டமென் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். (4)
You little Kuyil who frequents the groves that are filled with honey-sweet fruits, you listen to this. Our Lord disregarding the celestial beings came down to this earth and redeemed the devotees. Disregarding my body He entered my mind and became my consciousness. He is also the consort of the goddess who has eyes that are prettier than that of a doe. Coo and call that groom to come!
சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். (5)
O Kuyil that produces sweet and delightful sound! Our Lord is like a Sun with radiating rays who came down from heaven to remove the desires of his devotees. He remains the beginning, the middle and the end. Brahma, Thirumal and Ruthra have not been able to see His sacred reddish feet. He remains to save His devotees. Coo and call the redeemer to come!
இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். (6)
O Kuyil that sings from the branch of a tree! I will make you happy if you listen to me. Our Lord is the supreme ruler of the seven worlds. He is kind to all. He takes pleasure in imparting the nectar like knowledge to all. He came down from heaven on a steed that looked as if it was made of gold inlaid with precious stones. Coo and call Him, the Lord of Kokazhi!
உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய். (7)
O Kuyil! I will have affection for you and become your companion too. He glows in the beautiful body which looks like it had been made from gold. He is king. He came down riding a stallion to become the Lord of Perunthurai. He is the Kings of the South, the Cheran, The Chozhan and the great Buyankan. Coo and call Him to come.
வாஇங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவியவர் உன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். (8)
O you young Kuyil, come here! When Thirumal and Brahma went in search of Him but failed and stood lost, He rose as a burning column of fire rising to a great height through the sky beyond the cosmic space. He is the truth. He rides the galloping horse and wears long hair. Coo and call Him to come.
காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். (9)
O Kuyil! You live in this fertile grove with your black gleaming body. The noble one who lives in my heart has a glorious body like a reddish lotus flower. He showed His feet to this world and thus severed my bonds and ruled over me. He is my nectar whose body is of golden colour. Coo and call Him to come.
கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்கு என்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய். (10)
Kuyil, you who roam about in this lush grove full of blossoms, hear this! One day He came to this world as a Brahmin and showed His sacred feet to me and accepted me too as one of His followers and enslaved me and redeemed me. He is the Master of all gods, who appears with a body that is bright like burning embers. Coo and call Him to come!
திருச்சிற்றம்பலம்