TAMILSEI.COM

22. கோயில் திருப்பதிகம் – Koyil Thiruppathikam – Thiruvaasagam – திருவாசகம்

22. கோயில் திருப்பதிகம் – Koyil Thiruppathigam

அநுபோக இலக்கணம் – Pleasure of God’s grace

மாறிநின் றென்னை மயங்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே. (1)

O the clear honey! O Lord Siva dwelling in Thirupperunthurai! You are the happiness that surpasses all other pleasures! My source of love! You are the ambrosia that barricades the deceitful emotions of my five senses. You, the eternal flame that springs within myself, grant me your grace to see You as You are.

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலனொர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே. (2)

You came before everything, You stay after everything and You fill everything. The Primal one with no end! Dweller of South Perunthurai, King of glorious Sivapuram! You granted me your grace beyond my worth which made my body and soul melt in happiness and love. I have no way of returning your kindness?

அரைசனே அன்பர்க்கு அடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. (3)

O the King of the devotees! O My father! You have entered every pore of my body and soul and have made it melt. You the real light of wisdom who have banished the darkness of false ideas. You are like a cool sea of nectar. O Thirupperumthurai dwelling Lord Siva! O the consciousness beyond words! Make me understand how I can describe you.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்கும் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற் கினியென்ன குறையே. (4)

You are beyond the knowledge of enlightened sages, celestials and others! You are incomparable! You give life to all earthly lives. You the panacea that frees my affliction of birth. O the clear space amidst the thick darkness! The Lord dwelling in Thirupperunthurai! O the characterless bliss! What will I lack now that I have reached you!

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக் கேனே. (5)

O the One without deficiency! The Faultless Ambrosia! The endless mount of glowing flame! The superior object that has entered my mind as the Vedas and their essence. O the unbounded flood that flows in my heart! O the Lord entempled in Thirupperunthurai! O Lord! You have taken my body as your place of residence! What else do I need to ask of you?

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய் அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. (6)

You the rising flame in my mind that melts my heart yearning for more. You the one with feet like the lotus flower on the crowns of the celestials. Thirupperunthurai dwelling Lord Siva! You take the form of ever present space, water, earth, fire and air yet you are none of these. You can also remain unseen! I am delighted having set my eyes on you today!

இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற்பாரே. (7)

O Lord Siva of Thirupperumthurai! You blessed me today and removed the darkness of my mind like a rising Sun. I failed to reckon that it was due to your grace. Later I realised that there was nothing else except You. You fill every atom of other objects and then dissipate slowly from them. You do not become one object but there is no other object without You! Who is there who truly understands You?

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருறவு எனக்கிங்கு ஆர் அய லுள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதி. (8)

You became the earth, the space and all other cosmic objects and spread as an expanse of light! You are like fire in water! The faultless one beyond imagination! The honey that seeps in the heart of devotees blessed with the sea of your mercy! Lord Siva of Thirupperumthurai! Who are my relatives here? Who are my neighbours? You are the fire that gladdens my heart.

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. (9)

O the light that takes a form and the formless one too! The indescribable beginning, the middle and the end too! The sea of happiness that severs the bonds of birth! The mountain of mercy that brings benefits free of evil! Lord Siva of Thirupperumthurai! Come and grant me the blessings of both your feet and show me a way to get out of this bondage.

தந்ததுஉன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற் கிலன்ஓர் கைம்மாறே. (10)

You gave me, yourself and took me in return. I received unending happiness from You, but what have You received from me? O Sankara! Tell me, who is more devious of the two? My God who is entempled in my heart is the one dwelling in Thirupperumthurai. O my father, my premier God, You have taken my body as your dwelling. There is nothing I can do to return this favour.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows