TAMILSEI.COM |
சிவானந்தம் அளவறுக் கொணாமை – Immeasurable Grace of God
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
புதும லர்க்கழ லிணையடி பிரிந்தும்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரனே அருட்பெருங் கடலே
அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (1)
O my Sire! O Aran! The sea of mercy! My father! You, the one unseen by Ayan and Maal ! The one with the red hued body! I live a false life. Though I parted company of your flowery feet that entered my heart and melted it and gave me pleasure like seeping nectar, I am not dead yet. I lost my aim in life though I was wide awake. O Lord Siva at Thirupperumthurai! I do not know what I should do.
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும் நின்மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (2)
O Lord Siva of Thirupperumthurai!. The celestials and others have performed penance taking just water and air for sustenance while termite mounds and plants grew around them, yet have failed to see your flowery feet. My King! You included me in your hoard of devotees with just one word. In spite of your mercy, I did not become anxious; my heart did not melt for You and I have not grieved for my behaviour. I still continue to roam around carrying this unbearable body.
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலைநீர்விடமுண்ட
நித்தனே அடையார்புரம் எரிந்த
சிலையனே எனைச் செத்திடப் பணியாய்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. (3)
O Lord Siva of Thirupperumthurai! O Rider of the bull! Sankara! Benefactor to the innumerable celestials! The everlasting survivor from the poison of the sea! Bearer of the bow that destroyed Muppuram! You deemed me, this low living soul, worthy of your mercy and offered me your blessings. I, due to my pride and delight behaved in an uncouth manner. Therefore O Lord! Please make me dead!
அன்ப ராகிமற்று அருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற்று அழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும் என்சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (4)
O the Lord of Thenparaithurai! The Monarch of Sivalokam! Lord Siva entempled in Thirupperum -thurai! Brahma and Vishnu became your devotees and performed rare penance. There were many other devotees who melted like wax in fire and wasted away thinking about You. While all of them waited, why did You appear before me and enslave me? O Lord my heart is hard like a tough wooden piece and my eyes are like wood and my ears are like iron.
ஆட்டுத் தேவர் தம் விதியொழித் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி இருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாதனே உனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (5)
O Lord Siva, dwelling in Thirupperumthurai! The Lord of the celestials! You are unreachable by the earthly sages who call themselves Devas on the earth. O my leader! I will not follow the edicts of the celestials but will be loyal to you only. Please show me your sacred feet and thus your grace that will prevent me from going away from you. Please give me your blessings so that I can abandon this illusory body of mine.
அறுக்கிலேன் உடல் துணிபடத் தீப்புக்கு
ஆர்கிலேன் திருவருள் வகைஅறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றிஎன் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்க என்றருளாய்
சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (6)
O Lord Siva dwelling in Thirupperunthurai surrounded by water filled rice fields! You appear mounted on your bull to those who worship you and praise you. I do not comprehend the greatness of your grace. I have not cut my body into pieces nor entered the fire. I am unable to bear this body any more. But I do not know what else I can do. What shall I do to bring happiness to my life? Bless me by telling me what I should do.
மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (7)
O the Conjuror! The heavenly One who consumed the poison from the waves filled sea! O the nectarine with the blue coloured throat! Dweller of Thirupperum-thurai! I am a dog like low life who does not think of You. Though I am an ignorant soul who does not bow down at your feet with the word, ‘Namasivaya’. Please show me your mercy and enslave me. O Pinjaka with the crescent moon on the crown of matted hair! Is it fair that I should wail from a distance separated from You?
போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடியனேன் இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (8)
O Lord Siva dwelling in Thirupperumthurai surrounded by fields filled with cool water! While Lotus seated Brahman, Thirumal residing in Milky sea, Indran and other celestials wait to receive your grace, You showed me your anklets worn feet and offered me your blessings and showed me a purpose to join your hordes of devotees. I was lost without knowing what I could do and You came as a cure to my ills. Is it sweet to You that I should suffer so?
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர்கொண்டபூங் கழலாய்
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. (9)
O Lord Siva dwelling in Thirupperunthurai, surrounded by fields filled with carp fish and blue Kuvazhai flowers! You with the flowery feet that took the life of the Lord of death, Yama! You who wears the river Ganges on your hair! You who carries fire in your hands! While Indran, Brahma, the celestials and others on this earth wait to see you, You preferred to come to me and enslave me. Please allow me to reach your flowery feet, which Lord Thirumal also cries aloud to reach.
அளித்து வந்தெனக்கு ஆவஎன் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே. (10)
O Lord Siva entempled in Thirupperunthurai! You are beyond reach even to Lord Thirumal with the conch shells and to Lord Brahma on a lotus flower. You of the form of half-women. Sea of mercy that dwells in Kailai mountain! You came and gave me your blessings so that I could rid me of my fear of being born again. I immersed myself in your sea of mercy, wallowed in it and drank in it. Yet my heart does not melt with devotion. I remain confused as all my delights have dissipated.
திருச்சிற்றம்பலம்