TAMILSEI.COM |
ஆத்தும இலக்கணம் – Self Realisation
கருடக் கொடியோன் காணமாட்டாக் கழற்சேவடி என்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வா என்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (1)
You faultless gem, You enslaved me by showing me your reddish feet which even Lord Thirumal who owns the banner of eagle could not see. I wish you to bid me to get rid of my darkness of ignorance and come to You to receive your graces. This is what I yearn for Ammanae!.
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (2)
O the One beyond understanding by every kind of person! My Nectar! I cannot bear to be in this sack that has strings of nerves, filled with brain and bones and covered with skin. O my King! Will You not call me to You? O My Father! I love to see You. This is what I yearn for Ammanae!.
சீவார்ந்து ஈமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (3)
O my King! The Dancer! The Guru who protects and blesses me! Deva! The One who is rare to other celestials! Lord Siva! Call me to You so that this little hut that exudes pus and filth with swarms of flies perishes. Look at me awhile and call me to You. This is what I yearn for Ammanae!
மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
உடைந்துநைந் துருகி உள்ளொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (4)
O my Supreme God! This walking cage, which is full of bones, drenched in dirt and leaking filth, continues to affect me and cause me grief. My heart is broken, subdued and is melting and looks towards You and wish to reach you to remain at your sacred flowery feet. This is what I yearn for Ammanae!
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னா ரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. (5)
O the rider of the Bull! Wearer of Holy ash! My Nectar! My body is like a tamarind fruit with festering sores inside but covered by an outer skin. In spite of it You willingly came and enslaved me and accepted me as worthy of your grace! This is what I yearn for Ammanae!
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (6)
O Lord who has the flowery feet unseen even by the heavenly dwellers! The One who offers bliss! I, a dog like low life am worn out. I do not want to stay here. You gave me this life, therefore take it back. I want to behold the smile on your gleaming face. This is what I yearn for Ammanae!
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா உலகந் தந்து வந்தாட் கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. (7)
O the Cosmic light! O the supreme God who is hailed and worshipped by all on earth and heaven! You are the one who can offer me the world of bliss from where no one returns. O my Nectar! Please come and bless me so that I can roam around and worship you with your thousands of names. This is what I yearn for Ammanae!
கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (8)
O King of Thiruvaiyaru! I wish to worship You with my hands together and then hold your anklets worn reddish feet and place them on my head and shout , “ Our Supreme God” with my heart melting in devotion like wax put in fire. This is what I yearn for Ammanae!
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன் பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. (9)
O the incomparable Supreme God! I must throw away this sinful body! Then enter Your realm of Sivapuram and become delighted to see your radiant glow with my own eyes. I like to meet your flock of old devotees and join them. This is what I yearn for Ammanae!
வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. (10)
I was caught in the net of fake anger of those women whose eyes were in the shape of a fish. This made me, a dog like soul, to rot. O the glow of wisdom! I have no support other than You. You, whose half is the Goddess with feet those are soft like cotton! Say, with your precious mouth the words “Do not fear”. This is what I yearn for Ammanae!
திருச்சிற்றம்பலம்