TAMILSEI.COM

28. வாழாப்பத்து – Vaazhap paththu – Thiruvaasagam – திருவாசகம்

28. வாழாப்பத்து – Vaazhaap Paththu

முத்தி உபாயம் – No attachment in Life

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள் புரியாயே. (1)

O the God absolute! You encompass the earth and heaven. I have no affection to anybody else but You. Oh the King of Sivapuram filled with splendour! O Lord Siva, the dweller of Thirupperumthurai! To whom would I complain or mention my pain, if You who have enslaved me do not show me any mercy. You can see that I detest my life on this earth. Offer me your grace and say, “Come and join me”!

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந் துலகம் ஊடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எம்பெரு மானே என்னையாள் வானே
என்னைநீ கூவிக் கொண் டருளே. (2)

O the Gem that enslaved this rogue. I have no affection to anybody else other than You. You are beyond the understanding of the celestials. O Lord who went piercing the earth beyond the reach of Thirumal and Brahman. King of Sivapuram. O Lord Siva, the dweller of Thirupperunthurai! O my God absolute! The One who enslaved me! Offer me your grace and say, “Come and join me”!

பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஊடுவ துன்னோடு உவப்பதும் உன்னை
உணர்த்துவது உனக்கெனக்கு உறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (3)

I have no affection to anything else other than to your feet, which are sung in praise by Thirumal. You chose me and enslaved me, the King of Sivapuram. O Lord Siva, the dweller of Thirupperunthurai! I have tiffs with You, I enjoy your grace thus making you realise my state. You can see that I am wilting and not having a life here. Offer me your grace and say, “Come and join me”!

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லை மூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (4)

You my Lord burnt down the citadels of the sword carrying Asuras! The dancer residing at Thillai! King of Sivapuram! O Lord Siva, the dweller of Thirupperumthurai! Though Thiruman and Brahma went penetrating to the limits of the three worlds to see you but they failed as You grew taller than their limits. You can see that I have no affection except to You. You can see that this is no life for me. Offer me your grace and say, “Come and join me”!

பண்ணினேர் மொழியாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (5)

I have no affection except to You who share your body with the Goddess who speaks melodious words. That was why You enslaved me. O King of Sivapuram! O Lord Siva, the dweller of Thirupperumthurai! I have placed all senses of mind, body, mouth, ears and eyes towards You. You can see that my life in this world is not real. Offer me your grace and say, “Come and join me”!

பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (6)

I have no affection except to You who share your body with the Goddess whose soles are softer than cotton. You properly enslaved me. O King of Sivapuram! O Lord Siva, the dweller of Thirupperumthurai! I, a dog was afraid of the graces You offered me. I, this deceptive person, also forgot them due to my desires in life. I cannot live here more. Offer me your grace and say, “Come and join me”!

பரிதிவாழ் ஒளியாய் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (7)

I have no affection except to the feet of Yours, who gives light to the Sun. King of Sivapuram which is rich and beautiful. O Lord Siva, the dweller of Thirupperumthurai! My heart melts for your mercy but I am bewildered not knowing how I can continue my life joined with You. I cannot live in this world any more. Offer me your grace and say, “Come and join me”!

பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அருள்பெரும் பொருளே
ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (8)

I have no affection except to You, who share your body with the Goddess whose fingers caress a ball. O King of Sivapuram!You appear as a glowing flame. O Lord Siva, the dweller of Thirupperumthurai! O the Nectar without an end! The greatest merciful God! The rarest ambrosia! You gave me your grace and enslaved me. I cannot live in this world any more. Offer me your grace and say, “Come and join me”!

பாவநா சாஉன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழ லாய் நிமிர்ந் தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (9)

I have no affection except to the feet of Yours, who rids us of our sins. O Lord to the Devas! O the King of Sivapuram! O Lord Siva, the dweller of Thirupperumthurai! You stood tall as a roaring fire while Thirumal and Brahma went in search of your top and the bottom ends. You the one wearing the skin of an elephant! I am unable to live any more. Offer me your grace and say, “Come and join me”!

பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறைச் சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. (10)

I have no affection except to You, who share your body with the Goddess who always speaks the truth! O the King of Sivapuram wearing a majestic crescent on your crown. O Lord Siva, the dweller of Thirupperumthurai! Tell me, Will I worship anyone else, praise them or consider them as my support. I will not. O the rider of a young bull! I am unable to live any more. Offer me your grace and say, “Come and join me”!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows