TAMILSEI.COM |
நிருத்த தரிசனம் – Sighting of the Dance
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. (1)
My atraction towards my lustful desires was leading me to wander into many cycles of life and death and finally into hell. But I was enslaved by my Lord who cleared my mind from wandering around and made me His own. I saw Him who gives limitless joy at Thillai.
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகும் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. (2)
I was caught in the misery caused by my past sins. I did not think of our Lord and was lying weak. One day He enslaved me and severed my cycle of birth. He is incomparable. I saw Him at the Ambalam in Thillai where the whole world worships Him.
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. (3)
At the time when I did not understand Him, He entered my mind and stayed within me. Then He enslaved me due to His kindness. He is Lord Sivan dwelling in Thiruthuritthi, who grants sweet salvation. He showed Himself to this dog like soul in beautiful Thillai.
கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி இருக்கும் வண்ணம்
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. (4)
I am like an un-learnt, ignorant lowest kind of dog. He severed my worldly attachments and blessed me as a competent person with knowledge and beauty for everybody to see. I saw Him at the Ambalam in Thillai where everybody go to worship Him.
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. (5)
I was a hapless dog caught up in the whirlpool of caste, class and birth when He got rid of my misery and enslaved me. He rid me of my foolish believes, my impressions of others, my arrogance about me and mine. He, who is the faultless ambrosia, was seen by me in Thillai where He is worshipped with love.
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென்று இவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. (6)
He removed my cycle of birth, the process of illness and old age and severed the attachments to my relatives. He is the peerless One. In Chittambalam situated in Thillai which is surrounded by beautiful groves, I saw Him while the celestials and learned sages worshipped Him.
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. (7)
He offered me His grace by severing my attachments in this life which had neither devotion nor salvation. He made others call me insane due to my devotion but He did not abandon me. He bound my mind to His feet with a strong rope of devotion. He is such a magician. I saw all His such divine games at glorious Thillai.
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே. (8)
I was immersed in measureless desires without realising the consequences of my thoughts; I remained ignorant of the future. Then He offered me immeasurable happiness and enslaved me. I saw Him in Thillai where the guiltless celestials gather to worship Him.
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. (9)
He offered me His unending love to enlighten me, a dog like soul who does not know good manners and good moral behaviour. He removed my sins and curses and offered me His immense mercy. I saw Him at Thillai Court where they learn the four Vedic scriptures.
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. (10)
The five elements are Him, the senses are Him, the objects are Him and He makes the variation in all and still remains the one creator who has no division. He is the one who got rid of my sufferings and enslaved me. He is the emerald that glows like a light. I saw Him at Thillai where Vedic scriptures worship and hail Him.
திருச்சிற்றம்பலம்