TAMILSEI.COM |
ஆனந்த முறுதல் – Absorption in Divine knowledge
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்(கு)
அற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (1)
I do not fear the snake living in its ant-hill or the statements made as truth by men who habitually utter lies. I only fear those ignorant people who believe that there is another God even after reaching the feet of our Lord who has a crown of braided hair and an eye on His forehead.
வெருவரேன் வேட்கை வந்தால்
வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர்
தேவர் எத் தேவரென்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (2)
I do not fear the assault of physical desires or that the sea of curse of my past sins may engulf me. Our Lord who could not be found by Maal and Brahman, is the only supreme God. I only fear those who do not question as to what other God is there other than our God.
வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (3)
I do not fear the spear that reeks of flesh nor the seductive glances of bangles worn women. I only fear those who do not accept the graces offered, who lack the love to praise and worship the faultless Gem who dances at Ambalam at Thillai and melts your bone with His glance.
கிளியனார் கிளவி அஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (4)
I do not fear the chatter of parrot like women or their seductive smile. Our Lord is the One who is the essence of Vedic scripture, who has a holy ash smeared body. I do fear those who arrive at His feet and do not worship and adore Him with a melting heart, weeping and submitting to Him with tearful eyes.
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன்
தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச்
சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (5)
I will not fear even if all the illnesses assail me. I do not fear either the birth or death. Our Lord is the one who wears the crescent moon and whose feet could not be found by Thirumal even after burrowing the earth. I do fear those who do not wear the holy ash and do not join the devotees and hail His glorious feet
வாளுலாம் எரியும் அஞ்சேன்
வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (6)
I do not fear a blazing fire or even if the mountain breaks up and tumbles towards me. Our Lord Sivan is the One who has holy ash covered shoulders with the bull as His mount and who is beyond description by words. What I do fear are those who do not praise His lotus feet and with a melting heart offer fresh flowers to it.
தகைவிலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை
முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (7)
I do not fear undeserved disgrace or even death. Our Lord carries in His hand a fire that billows smoke, dances at the large court of Ambalam in Thillai and wears the Konrai flowers as His garland. What I do fear are those who do not worship His feet with a melting heart.
தறிசெறி களிறும் அஞ்சேன்
தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச்
சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (8)
I will not fear the tied up elephant or the tiger whose eyes are like burning embers. What I fear are those ignorant people who do not worship the feet of our Lord, our father, who is adorned with fragrant hair, who could not be reached even by the celestials and who could give grace to better ones life.
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (9)
I do not fear the thunderbolt from the cloud or the relationship with the king! The Lord who converted the poison into ambrosia is our god, the only god and He has enslaved us. I do fear those who fear the holy ash and refuse to wear it.
கோணிலா வாளி அஞ்சேன்
கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே. (10)
I do not fear the arrows that do not fail its target or even the anger of the god of death, Yama. I do fear those who lack the manliness to weep till their eyes are tired, who do not thaw and melt in their hearts and praise and worship at the thought of our Lord who wears the crescent moon.
திருச்சிற்றம்பலம்