TAMILSEI.COM

39. திருப்புலம்பல் – Thirup pulambal – Thiruvaasagam – திருவாசகம்

39. திருப்புலம்பல் – Thirup pulambal

சிவானந்த முதிர்வு – The Sacred Lament

பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. (1)

O Lord! The One who could not be found either by Ayan who sits on a lotus flower or by Thirumal. The One who had given His half to His consort whose pointed bosoms are adorned with the Konku flowers! The One who has Holy ash smeared over His body and templed in Thiruvarur surrounded by high parapet walls! I will not worship anything else other than your flowery feet!

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. (2)

O the Lord wearing matted hair! Dancer on the fire! The one possessing the three pronged weapon! The eternal flame! Pasupathy! The One who has the white bull as the mount! Dweller of Perunthurai, surrounded by luxurious groves! The One who possesses this devotee! I do not know anything else other than You that can be of any help to me.

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. (3)

O the dancer residing in Kutralam! I do not need my relatives; I do not need my village; I do not need a name; I do not need the learned; What I have learnt is enough. All that I want is to yearn like a cow for its calf, for the sweet sound of Your feet, the dancer residing in Kutraalam!

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows