TAMILSEI.COM

43. திருவார்த்தை – Thiru vaarththai – Thiruvaasagam – திருவாசகம்

43. திருவார்த்தை – Thiru vaarththai

அறிவித்து அன்புறுதல் – The Sacred Word

மாதிவர் பாகன் மறைபயின்ற
வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணை யடியார்
குலாவுநீதி குணமாய நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவார் எம்பிரா னாவாரே. (1)

His consort is His half. Vedas are His words. He is the bright light enthroned on the flower. He is the faultless divine mercy. He is the one who imparts moral integrity to His devotees. He has descended upon this earth to reveal Himself as the primal god and is dwelling in Perunthurai which is surrounded by flower filled groves. Those who have received His grace will be our revered leaders.

மாலயன் வானவர் கோனும்வந்து
வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடம்நீடு
குலாவு மிடவை மடநல்லாட்குச்
சீலமிகக் கருணை அளிக்குந்
திறமறிவார் எம்பிரா னாவாரே. (2)

When Vishnu, Brahma and Indra bowed before our Lord Eesan, He offered them His grace. He has come down on this earth and showed me the true path. He showed mercy to the Lady of Idavai where the mansions are adorned with gems and luxury. Those who understand such acts of mercy of merit will be our revered leaders.

அணிமுடி ஆதி அமரர்கோமான்
ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரருளாளன் பெண் பாலுகந்து
மணிவலை கொண்டு வான்மீன்விசிறும்
வகையறிவார் எம்பிரா னாவாரே. (3)

He was the beginning, the one with matted hair. King of the celestials. Blissful dancer. The God serviced by six religious sects. He is the God dwelling in Perunthurai , worshipped by both the earth and the heaven, who mercifully destroys the woes with His grace. He is the one who cast His nest to catch a large fish to make His consort happy. Those who know His ways will become our revered leaders.

வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார் எம்பிரா னாவாரே. (4)

Our Lord Siva took the form of a hunter and stayed in Mount Mahendra where the celestials with grievances went in search of Him. But He willingly came down on His dancing steed to dwell in Perunthurai so that His devotees could be liberated. He thus removed the distresses of His devotees everywhere and redeemed them. Those who know that this is His nature will become our revered leaders.

வந்திமை யோர்கள் வணங்கியேத்த
மாக்கருணைக் கடலாய் அடியார்
பந்தனை விண்டுஅற நல்கும்எங்கள்
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள்
உந்து திரைக்கடலைக் கடந்தன்று
ஓங்கு மதிலிலங்கை அதனில்
பந்தணை மெல்விர லாட்கருளும்
பரிசறிவார் எம்பிரா னாவாரே. (5)

Our Lord of Perunthurai, is an ocean of mercy who is praised and worshipped by the celestials. He is the one who redeems His devotees by severing their bondages. He is the one who blessed the nimble fingered maiden who lived within the high walls in Lanka across the surging wave filled sea. Those who know this will become our revered leaders.

வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவனாய்க் கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே. (6)

Our Lord is the Bowman who set the three citadels on fire with His arrow. He is the one who went in the forest surrounded by ferocious hounds leading the celestials who were carrying out His requests. He is the One who took pity on the pig and suckled its young piglets. He is my father, the prime God in Perunthurai. Those who know this will become our revered leaders.

நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர்சோதி யெம்ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங்கெடுத்து அருள் செய்பெருமை
அறியவல்லார் எம்பிரா னாவாரே. (7)

Goddesses Saraswathy and Luxmi who have beautiful foreheads and sitting on lotus flowers, surrounded by humming of bees, praise and bow down to our radiant Lord Easan who resides in Perunthurai which is full of groves of flowering trees. He came down and removed our differences and thus graced us. Those who understand such honour will become our revered leaders.

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார் எம்பிரா னாவாரே. (8)

Our Lord wears the garland made of Konrai flowers on His chest. He is the bold one who also killed the fierce tiger. He has His consort Goddess Uma as His part. He is the king of Perunthurai surrounded by pretty groves. He is our Lord Eesan of immense fame who embraced the shoulders of the maiden who appeared in a fire of the god of oceans – Varunan. Those who know this will become our revered leaders.

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும்
கிடப்பறிவார் எம்பிரா னாவாரே. (9)

Our Lord wears pure white holy ash on His body. He is the Lord of Mount Mahendram who came down to this earth and placed His feet on His devotees, which feet are worshiped by the Devas. He is the southerner, King of Perunthurai, who that day revealed His mercy and love by showing His feet. He thus removed my sorrows and became my ruler. Those who know this will become our revered leaders.

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
இகபரம் ஆயதோர் இன்பம்எய்தச்
சங்கம் கவர்ந்துவண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறிவார் எம்பிரா னாவாரே. (10)

Our God, the Lord of the celestials has merciful eyes. He is the ambrosia to His devotees. He has come down to this earth as Lord of Perunthurai. He blessed and severed the bondages that enabled His followers to attain bliss both in this world and the next.. He arrived in Madurai full of women with bangles made of conch shells. Those who know this will become our revered leaders.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows