TAMILSEI.COM

46. திருப்படை எழுச்சி – Thiruppadai ezhuchi – Thiruvaasagam – திருவாசகம்

46. திருப்படை எழுச்சி – Thiruppadai ezhuchi

பிரபஞ்சப் போர் – The Sacred War

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. (1)

O Devotees! Beat the drum of primary sound of natham for our Lord carrying the sword of spiritual knowledge, the Gnanam. Hold the white canopy over the Lord riding the heavenly charger, the bull! Enter and encase yourself with the armour of Holy-ash. Let us protect the heavenly abode from the army of illusions called Maya!

தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. (2)

O helpers! Go in the front position. O devotees! Take the encircling position. O Yogis! Take the lead of the main ranks. O sages! You take the rare position. This will allow us to take over and rule the heavenly abode. Thus we can safeguard ourselves from the army that brings troubles.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows