TAMILSEI.COM

48. பண்டாய நான்மறை – Pandaaya Naanmarai – Thiruvaasagam – திருவாசகம்

48. பண்டாய நான்மறை – Pandaaya Naanmarai

சிவானுபவத்தை உரைத்தல் – Revealing of divine grace

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. (1)

The ancient four Vedhas could not approach Him, The two devas, Thirumal and Brahma could not see Him. But He the king of Kokazhi accepted me, this low life as His slave. O heart! Is there anything that I could do in return to thank Him?

உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவும் கெடும்பிறவிக் காடு. (2)

Praise Pernthurai where the munificent Lord who came down on a steed dwells. It is He who allowed His flood of grace to flow so the three ‘Malas’ (binding attachments) could be destroyed. If you so praised, then the forest of births with be destroyed with their roots.

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. (3)

He is like a hunter in the forest, expert netter in the sea, skilled horseman in the country. He is the one in Perunthurai who removes our sins and grants us His grace. O my heart! Praise His lotus like feet so that all your anxieties could be removed.

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்-சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். (4)

Our Lord at Perunthurai is surrounded and worshiped by the celestials. Those who worship Him are the ones who live a truthful life, who can get rid of their sins and who will be suitable to be revered by others of this world.

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். (5)

O my heart! In order to get rid of all our troubles, go to Perunthurai. Approach the king of Kokazhi. Seek the Lord in Uththarakosamangai where He has remained with His maiden whose speech is like music.

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக்-காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. (6)

Our Lord removes the cycle of birth from devotees who consider all their sensory feelings as bliss granted by the Lord who never leaves Perunthurai. O my heart! Praise Him till the tongue gets tired.

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை-பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து (7)

He, my Lord is the target of all speeches and also remains as the faultless gem beyond words. I kept the image of His healing feet in my heart and spoke of His precious name in Perunthurai and thus severed my birth.

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows