TAMILSEI.COM

51. அச்சோப்பதிகம் – Achchop Pathigam – Thiruvaasagam – திருவாசகம்

51. அச்சோப்பதிகம் – Achchop Pathigam

அனுபவ வழி அறியாமை – Unexplained route to attainment

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (1)

I mixed and mingled with the cruel and the violent who knew nothing about the path to salvation. My Lord then showed me the art of devotion and removed my old sins and severed my negative thoughts and made me a Shiva devotee and took me under His reign. He is my father! Who else could receive such kindness as I have received?

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. (2)

I deemed malevolent conduct as the normal behaviour. He, my Lord prevented me from behaving in such a mean manner and made me to receive His grace. By His grace, my Lord, the dancer, the one devoid of any motives, made me to witness His dance. Who else could receive such kindness as I have received?

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (3)

I considered all deceits as truthfulness and was enthralled by the pleasure of the tight bosomed women. I was saved from being consumed by such pleasures by the Lord who has His consort on His left side and made me receive salvation at His feet. Who else could receive such an offer like that as I have received?

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டு என்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (4)

I was destined to be born on this earth and doomed to perish. But You with your immense mercy redeemed me and made me wear the white holy ash and join the path of pure devotion. Who else will receive such grace as that was offered to me by my Lord?

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. (5)

I was troubled by the glances of damsels with soft cotton like feet and remained filled with grief. I then received your blessings. I was thus redeemed by my Lord who owns me! You made me welcome and spoke, “Do not fear”. Who else will receive such kindness as that was offered to me?

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (6)

I mistook the birth of this body that would eventually burn and perish as if it will last forever and increased my sinful acts. I was prone to fall on the pointed bosoms of the damsels with flower decked locks of hair and wearing coral bangles in their wrists. You severed all my attachments and redeemed me by removing my past sins. You offered me the bliss which is the ultimate goal. Who else can receive such offers as I have?

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (7)

I was destined to be consumed by my lust for women. You slowly brought me to your realm and removed my attachments that was blocking my path and showed me the way to redemption. You also taught me the meaning of the Mantra ‘OM’. O my Lord! Who else would receive such an offer as You had given me?

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (8)

I was baffled having been caught in the whirlpool of birth and death. I had fallen for the pleasures of union with jewels bedecked women. My Lord who has His consort as His half offered me His blessings to reach His anklets worn feet. O my Prime God! Who else could receive such blessings from You as I have?

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (9)

I joined the men of ignorance who did not know the difference between good and bad. He, the Primordial God stripped me of the three Malas (that prevents the union with God), made me someone worthy of His grace and put me in a position like putting a dog on a pedestal. Who else could receive such an honour as I have received?

செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. (10)

The places where we were born and died and the realm of Lord Shiva where death is banished are all beyond our understanding. It is you who revealed to me that all the worlds and the objects there in are of the same quality. It is You who gave me that knowledge. Who else would receive such knowledge from You except me?

படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. (11)

I joined your devotees in order to give up my attachments. But You saved me from hell though I had not been true to You. You showed me your feet which were beyond the reach of Brahma and Vishnu. Who else could receive such an honour except me?

பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. (12)

I spent half my day, sleeping at night and the rest half, searching for food. I was prone to suffer trouble daily and eventually die one day. You the prime leader enslaved me by liberating me from my caste, creed and birth and made me known to the world. Who else can receive such a graceful gift except me?

திருச்சிற்றம்பலம்

< PREV | NEXT >
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows