பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
தானன் னானன்னா தானன் னானன்னா
தானன் னானன்னா தானன் னானன்னே!
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 1.92.3
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 1.92.4
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 1.92.5
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 1.92.6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 1.92.7
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 1.92.8
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 1.92.9
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 1.92.10
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 1.92.11
.. _/\_ .-. திருச்சிற்றம்பலம் .-. _/\_ ...
|
paN - kuRinji
thiruchiRRampalam
thAnan nAnannA thAnan nAnannA
thAnan nAnannA thAnan nAnannE!
vAsi thIravE, kAsu NalkuvIr
mAsin mizhalaiyIr, Esa lillaiyE. 1.92.1
iRaiva rAyinIr, maRaikoL mizhalaiyIr
kaRaikoL kAsinai, muRaimai NalkumE. 1.92.2
seyya mEniyIr, meykoL mizhalaiyIr
paikoL aravinIr, uyya NalkumE. 1.92.3
NIRu pUsinIr, ERa thERinIr
kURu mizhalaiyIr, pERum aruLumE. 1.92.4
kAman vEvavOr, thUmak kaNNinIr
NAmam mizhalaiyIr, sEmam NalkumE. 1.92.5
piNikoL sataiyinIr, maNikoL mitaRinIr
aNikoL mizhalaiyIr, paNikoN taruLumE. 1.92.6
mangkai pangkinIr, thungka mizhalaiyIr
kangkai mutiyinIr, sangkai thavirminE. 1.92.7
arakkan Nerithara, irakka meythinIr
parakku mizhalaiyIr, karakkai thavirminE. 1.92.8
ayanum mAlumAy, muyalum mutiyinIr
iyalum mizhalaiyIr, payanum aruLumE. 1.92.9
paRikoL thalaiyinAr, aRiva thaRikilAr
veRikoL mizhalaiyIr, piRiva thariyathE. 1.92.10
kAzhi mANakar, vAzhi sampaNththan
vIzhi mizhalaimEl, thAzhum mozhikaLE. 1.92.11
.. _/\_ .-. thiruchiRRampalam .-. _/\_ ...
|