சிவமயம்

அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்

(மாணிக்கவாசகர்)

achappaththu - AnaNththamuRuththal

(mANikkavAsakar)
(தில்லையில் அருளியது -
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         520

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.         525

திருச்சிற்றம்பலம்
(thillaiyil aruLiyathu -
aRusIrkkazhi Netilati Asiriya viruththam)

puRRiLvAL aravum anjsEn poyyartham meyyum anjsEn
kaRRaivAr sataiem aNNal kaNNuthal pAtham NaNNi
maRRumOr theyvaNth thannai uNtena NinaiNththem pemmARku
aRRilA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         516

veruvarEn vEtkai vaNththAl vinaikkatal koLinum anjsEn
iruvarAl mARu kANA empirAn thampirA nAm
thiruvuru anRi maRROr thEvareth thEva renna
aruvarA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         517

vanpulAl vElum anjsEn vaLaikkaiyAr kataikkaN anjsEn
enpelAm uruka NOkki ampalath thAtukinRa
enpolA maNiyai Eththi initharuL paruka mAttA
anpilA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         518

kiLiyanAr kiLavi anjsEn avarkiRi muRuval anjsEn
veLiyaNI RAtum mEni vEthiyan pAtham NaNNith
thuLiyulAm kaNNarAkith thozhuthazhu thuLLam Nekkingku
aLiyilA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         519

piNiyelAm varinum anjsEn piRappinO tiRappum anjsEn
thuNiNilA aNiyinAnthan thozhumparOtazhuNththi ammAl
thiNiNilam piLaNththung kANAch sEvati paravi veNNIRu
aNikilA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         520

vALulAm eriyum anjsEn varaipuraN titinum anjsEn
thOLulAm NIRRan ERRan soRputham kataNththa appan
thALathA maraikaLEththith thatamalar punaiNththu Naiyum
ALalA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         521

thakaivilAp pazhiyum anjsEn sAthalai munnam anjsEn
pukaimukaNth therikai vIsip poliNththa ampalaththu LAtum
mukaiNakaik konRaimAlai munnavan pAthamEththi
akamNekA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         522

thaRiseRi kaLiRum anjsEn thazhalvizhi uzhuvai anjsEn
veRikamazh sataiyan appan viNNavar NaNNa mAttAch
seRitharu kazhalkaL Eththich siRaNththini thirukkamAttA
aRivilA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         523

manjsulAm urumum anjsEn mannarO tuRavum anjsEn
NanjsamE amutha mAkkum NampirAn empirAnAych
senjsevE ANtu koNtAn thirumuNtam thItta mAttAthu
anjsuvA ravaraik kaNtAl ammaNAm anjsu mARE.         524

kONilA vALi anjsEn kURRavan sIRRam anjsEn
NINilA aNiyinAnai NinaiNththu NaiNththuruki Nekku
vANilAng kaNkaL sOra vAzhNththaNinREththa mAttA
ANalA thavaraik kaNtAl ammaNAm anjsu mARE.         525

thiruchiRRampalam     
திரு சம்பந்தம் குருக்கள் குரலில்:


திரு இளையராஜா சிம்பொனி இசையில்:


Back to வழிபாட்டுப் பாடல்கள்