சிவமயம்

கந்தர் சஷ்டி கவசம்

(ஸ்ரீ தேவராய சுவாமிகள்)

kaNththar sashti kavasam

(srI thEvarAya suvAmikaL)
    குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

    காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

    நூல்

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்    ... ... 5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக    ... ... 10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக    ... ... 15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென    ... ... 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க    ... ... 25

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்    ... ... 30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்    ... ... 35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்    ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்    ... ... 45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண    ... ... 50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து    ... ... 55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று    ... ... 60

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க    ... ... 65

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க    ... ... 70

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க    ... ... 75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க    ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க    ... ... 85

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க    ... ... 90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க    ... ... 95

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க    ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க    ... ... 105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்    ... ... 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்    ... ... 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்    ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்    ... ... 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட    ... ... 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய    ... ... 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்    ... ... 140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட    ... ... 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்    ... ... 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்    ... ... 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்    ... ... 160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்    ... ... 165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா    ... ... 170

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே    ... ... 175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை    ... ... 180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்    ... ... 185

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்    ... ... 190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்    ... ... 195

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய    ... ... 200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்    ... ... 205

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்    ... ... 210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை    ... ... 215

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி    ... ... 220

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்    ... ... 225

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி    ... ... 230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே    ... ... 235

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

    ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
    
    kuRaL veNpA

thuthippOrkku valvinaipOm, thunpam pOm,
Nenjsil pathippOrkkuch selvam paliththuk kathiththu Ongkum,
Nishtaiyung kAikUtum,
Nimalar aruL kaNththar sashti kavasaNth thanai.

    kAppu

amarar itarthIra amaram puriNththa
kumaran ati NenjsE kuRi.

    NUl

sashttiyai NOkka saravaNapavanAr
sishttaruk kuthavumsengkathir vElOn
pAthamiraNtil panmaNich sathangkAi
kItham pAta kiNkiNi yAta
maiyal Natanjseyyum mayilvAkananAr    ... ... 5

kAiyil vElAl enaik kAkkavenRu vaNththu
vara vara vElA yuthanAr varuka
varuka varuka mayilOn varuka
iNththira muthalA eNthisai pORRa
maNththira vativEl varuka varuka    ... ... 10

vAsavan marukA varuka varuka
NEsak kuRamakaL NinaivOn varuka
ARumukam pataiththa aiyA varuka
NIRitum vElavan Niththam varuka
sirakiri vElavan sIkkiram varuka    ... ... 15

sarahaNapavanAr satuthiyil varuka
rahaNa pavasa rararara rarara
rihaNa pavasa riririri ririri
viNapava sarahaNa vIrA NamO Nama
Nipava sarahaNa NiRaNiRa NiRena    ... ... 20

vasara haNapa varuka varuka
asurar kutiketuththa aiyA varuka
ennai ALum iLaiyOn kAiyil
panniraNtA yutham pAsa angkusamum
paraNththa vizhikaL panniraNtilangka    ... ... 25

viraiNththenaik kAkka vElOnvaruka
aiyum kiliyum ataivutanseLavum
uyyoLi seLavum uyir aiyum kiliyum
kiliyum seLavum kiLaroLi aiyum
Nilai peR Renmun Niththam oLirum    ... ... 30

saNmukam NIyum thaNiyoLi yovvum
kuNtali yAm siva kukanthinam varuka
ARumukamum aNimuti ARum
NIRitu NeRRiyum NINta puruvamum
panniru kaNNum pavaLach sevvAyum    ... ... 35

NanneRi NeRRiyil NavamaNich suttiyum
IrARu seviyil ilaku kuNtalamum
ARiru thiNpuyath thazhakiya mArpil
pal pUshaNamum pathakkamum thariththu
NanmaNi pUNta Navarathna mAlaiyum    ... ... 40

muppuri NUlum muththaNi mArpum
seppazhakutaiya thiruvayiRu uNththiyum
thuvaNta marungkil sutaroLip pattum
Navaraththinam pathiththa NaRsIrAvum
iruthotai azhakum iNaimuzhaNththALum    ... ... 45

thiruvati yathanil silampoli muzhangka
sekakaNa sekakaNa sekakaNa sekaNa
mokamoka mokamoka mokamoka mokena
NakaNaka NakaNaka NakaNaka Nakena
tikukuNa tikutiku tikukuNa tikuNa    ... ... 50

rararara rararara rararara rarara
riririri riririri riririri ririri
tutututu tutututu tutututu tututu
takutaku tikutiku tangku tingkuku
viNththu viNththu mayilOn viNththu    ... ... 55

muNththu muNththu murukavEL muNththu
enRanai yALum Erakach selva
maiNththan vENtum varamakizhNththu thavum
lAlA lAlA lAlA vEsamum
lIlA lIlA lIlA vinOthanenRu    ... ... 60

unthiru vatiyai uruthi yenReNNum
enthalai vaiththun iNaiyati kAkka
en uyirk kuyirAm iRaivan kAkka
panniru vizhiyAl pAlanaik kAkka
atiyEn vathanam azhakuvEl kAkka    ... ... 65

potipunai NeRRiyaip punithavEl kAkka
kathirvEl iraNtum kaNNinaik kAkka
vithisevi yiraNtum vElavar kAkka
NAsikaLiraNtum NalvEl kAkka
pEsiya vAythanaip peruvEl kAkka    ... ... 70

muppath thirupal munaivEl kAkka
seppiya NAvaich sevvEl kAkka
kannamiraNtum kathirvEl kAkka
enniLang kazhuththai iniyavEl kAkka
mArpai irathna vativEl kAkka    ... ... 75

sEriLa mulaimAr thiruvEl kAkka
vativE liruthOL vaLampeRak kAkka
pitarika LiraNtum peruvEl kAkka
azhakutan muthukAi aruLvEl kAkka
pazhupathi nARum paruvEl kAkka    ... ... 80

veRRivEl vayiRRai viLangkavE kAkka
siRRitai azhakuRach sevvEl kAkka
NAN Am kayiRRai NalvEl kAkka
ANpeNkuRikaLai ayilvEl kAkka
pitta miraNtum peruvEl kAkka    ... ... 85

vattak kuthaththai valvEl kAkka
paNaiththotai yiraNtum paruvEl kAkka
kaNaikkAl muzhaNththAL kathirvEl kAkka
aiviral atiyiNai aruLvEl kAkka
kAika LiraNtum karuNaivEl kAkka    ... ... 90

munkAiyiraNtum muraNvEl kAkka
pinkAiyiraNtum pinnavaL irukka
NAvil sarasvathi NaRRuNai Aka
NApik kamalam NalvEl kAkka
muppAl NAtiyai munai vEl kAkka    ... ... 95

eppozhuthum enai ethirvEl kAkka
atiyEn vasanam asaivuLa NEram
katukavE vaNththu kanaka vEl kAkka
varum pakal thannil vachsiravEl kAkka
aRaiyiruL thannil anaiyavEl kAkka    ... ... 100

Emaththil sAmaththil ethirvEl kAkka
thAmatham NIkkich sathurvEl kAkka
kAkka kAkka kanakavEl kAkka
NOkka NOkka Notiyil NOkka
thAkkath thAkkath thataiyaRath thAkka    ... ... 105

pArkkap pArkkap pAvam potipata
pilli sUniyam perumpakAi akala
valla pUtham valAshtikap pEykaL
allaR patuththum atangkA muniyum
piLLaikaL thinnum puzhakkatai muniyum    ... ... 110

koLLivAyp pEykaLum kuRaLaip pEykaLum
peNkaLaith thotarum piramarAtsatharum
atiyanaik kaNtAl alaRikkalangkita
irisik kAttEri iththunpa sEnaiyum
ellinum iruttinum ethirpatum aNNarum    ... ... 115

kanapUsai koLLum kALiyOtanE varum
vittAng kArarum mikupala pEykaLum
thaNtiyak kArarum saNtALarkaLum
enpeyar sollavum itivizhuNththOtita
Anai atiyinil arumpAvaikaLum    ... ... 120

pUnai mayirum piLLaikaL enpum
Nakamum mayirum NINmuti maNtaiyum
pAvaikaLutanE palakalasaththutan
manaiyiR puthaiththa vanjsanai thanaiyum
ottiyach serukkum ottiyap pAvaiyum    ... ... 125

kAsum paNamum kAvutan sORum
Othum anjsanamum oruvazhip pOkkum
atiyanaik kaNtAl alaiNththu kulaiNththita
mARRAr vanjsakar vaNththu vaNangkita
kAla thUthAL enaikkaNtAR kalangkita    ... ... 130

anjsi Natungkita araNtu puraNtita
vAyvittalaRi mathikettOta
patiyinil mutta pAsakka yiRRAl
kattutan angkam kathaRitak kattu
katti uruttu kAlkAi muRiya    ... ... 135

kattu kattu kathaRitak kattu
muttu muttu muzhikaL pithungkita
sekku sekku sethil sethilAka
sokku sokkuch sUrppakAich sokku
kuththu kuththu kUrvati vElAl    ... ... 140

paRRu paRRu pakalavan thaNaleri
thaNaleri thaNaleri thaNalathu vAka
vitu vitu vElai veruNtathu vOta
puliyum Nariyum punnari NAyum
eliyum karatiyum iniththotarNth thOta    ... ... 145

thELum pAmpum seyyAn pUrAn
kativita vishangkaL katiththuya rangkam
ERiya vishangkaL eLithinil iRangka
oLippunj suLukkum oruthalai NOyum
vAtham sayiththiyam valippup piththam    ... ... 150

sUlaisayang kunmam sokkuch sirangku
kutaichsal silaNththi kutalvip piruthi
pakkap piLavai patar thotai vAzhai
katuvan patuvan kAiththAL silaNththi
paRkuththu araNai paruarai yAppum    ... ... 155

ellAp piNiyum eNththanaik kaNtAl
NillA thOta NI enak karuLvAy
IrEzh ulakamum enakku uRavAka
ANum peNNum anaivarum enakkA
maNNA Larasarum makizhNththuRa vAkavum    ... ... 160

unnaith thuthikka un thiruNAmam
sarahaNa pavanE sailoLi pavanE
thiripura pavanE thikazhoLi pavanE
paripura pavanE pavamoLi pavanE
arithiru marukA amarA pathiyaik    ... ... 165

kAththuth thEvarkaL katunjsiRai vituththAy
kaNththA kukanE kathirvElavanE
kArththikAi maiNththA katampA katampanE
itumpanai ERRa iniyavEl murukA
thaNikA salanE sangkaran puthalvA    ... ... 170

kathirkA maththuRai kathirvEl murukA
pazhaNip pathivAzh pAla kumArA
Avinan kutivAzh azhakiya vElA
seNththinmA malaiyuRum sengkalvarAyA
samarA purivAzh saNmukath tharasE    ... ... 175

kArAr kuzhalAL kalaimakaL NanRAy
enNA irukka yAn unaip pAta
enaiththotarNth thirukkum eNththai murukanaip
pAtinEn AtinEn paravasamAka
AtinEn NAtinEn Avinan pUthiyai    ... ... 180

NEsa mutanyAn NeRRiyil aNiyap
pAsa vinaikaL paRRathu NIngki
unpatham peRavE unnaruLAka
anputan irakshi annamunj sonnamum
meththa meth thAka vElA yuthanAr    ... ... 185

siththipeR RatiyEn siRapputan vAzhka
vAzhka vAzhka mayilOn vAzhka
vAzhka vAzhka vativEl vAzhka
vAzhka vAzhka malaikkuru vAzhka
vAzhka vAzhka malaikkuRa makaLutan    ... ... 190

vAzhka vAzhka vAraNaththuvasam
vAzhka vAzhka en vaRumaikaL NIngka
eththanai kuRaikaL eththanai pizhaikaL
eththanai yatiyEn eththanai seythAl
peRRavan NI kuru poRuppathu un katan    ... ... 195

peRRavaLkuRamakaL peRRavaLAmE
piLLaiyen RanpAy piriya maLiththu
maiNththanen mIthu un manamakizhNth tharuLith
thanjsamen RatiyAr thazhaiththita aruL sey
kaNththar sashti kavasam virumpiya    ... ... 200

pAlan thEva rAyan pakarNththathaik
kAlaiyil mAlaiyil karuththutan NALum
AsA raththutan angkaNth thulakki
NEsa mutanoru Ninaivathu vAki
kaNththar sashtik kavasam ithanaich    ... ... 205

siNththai kalangkAthu thiyAnippavarkaL
oruNAL muppath thARuruk koNtu
OthiyE sepiththu ukaNththu NIRaNiya
ashtathik kuLLOr atangkalum vasamAyth
thisaimanna reNmar seyalathu aruLuvar    ... ... 210

mARRala rellAm vaNththu vaNangkuvar
NavakOL makizhNththu Nanmai yaLiththitum
Navamatha nenavum Nallezhil peRuvar
eNththa NALumI rettA vAzhvar
kaNththarkAi vElAm kavasath thatiyai    ... ... 215

vazhiyAR kANa meyyAy viLangkum
vizhiyAR kANa veruNtitum pEykaL
pollA thavaraip potip poti yAkkum
NallOr Ninaivil Natanam puriyum
sarva saththuru sangkA raththati    ... ... 220

aRiNththena thuLLam ashtalat sumikaLil
vIralat sumikku viruNththuNa vAkach
sUrapathmAvaith thuNiththakAi yathanAl
irupath thEzhvarkku uvaNththamu thaLiththa
kuruparan pazhaNik kunRini lirukkum    ... ... 225

sinnak kuzhaNththai sEvati pORRi
enaiththatuth thAtkoLa enRana thuLLam
mEviya vativuRum vElava pORRi
thEvarkaL sEnA pathiyE pORRi
kuRamakaL manamakizh kOvE pORRi    ... ... 230

thiRamiku thivviya thEkA pORRi
itumpA yuthanE itumpA pORRi
katampA pORRi kaNththA pORRi
vetsi punaiyum vELE pORRi
uyarkiri kanaka sapaikku OrarasE    ... ... 235

mayilNata mituvOy malar ati saraNam
saraNam saraNam sarahaNa pava Om
saraNam saraNam saNmukA saraNam.

    srI kaNththar sashti kavasam muRRiRRu.
       
சூலமங்கலம் சகோதரிகள் குரலில்:

Back to வழிபாட்டுப் பாடல்கள்