சிவமயம்

லிங்காஷ்டகம் - தமிழ்

lingkAshtakam - thamizh

திருச்சிற்றம்பலம்

ஓம் நமச்சிவாய

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரைப் போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்‌ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளைப் போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டுத் தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டுத் தரித்திர நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதைத் தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோகக் காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்!

திருச்சிற்றம்பலம்

thiruchiRRampalam

Om NamachsivAya

pramma murAriyar pORRitum lingkam
siRithum kalangkam illA siva lingkam
piRaviyin thuyaraip pOkkitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

thEvarum munivarum pORRitum lingkam
kAmanai eriththa karuNA lingkam
rAvaNa uLLam viLangkitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

vAsam anaiththaiyum pUsiya lingkam
vaLar aRivAkiya kAraNa lingkam
siththa surAsurar pORRitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

ponmaNi sUti sutarNththitum lingkam
thannilai NAkam aNiNththitum lingkam
thak‌shanin yAkam vIzhththiya lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

kungkumam saNththanam pUsiya lingkam
pangkaja mAlaiyai sUtiya lingkam
muNththiya vinaikaLaip pOkkitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

thEvar kanangkaLin archsana lingkam
thEtitum pakthiyin URitum lingkam
sUriyan kOti sutarvitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

ettuth thaLaththinil ezhuNththitum lingkam
ellAm Akiya kAraNa lingkam
ettuth thariththira NIkkitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

thEvarin uruvin pUjaikkOr lingkam
thEva vanamalarai ERRitum lingkam
paramaNa athaNAy paRavitum lingkam
NALum vaNangkum sathAsiva lingkam

lingkAshtaka ithaith thinamum
siva saNthNithiyil solvAr
sivalOkak kAtsiyutan
sivan aruLum koLvArkaL!

thiruchiRRampalam
     

Back to வழிபாட்டுப் பாடல்கள்