திருச்சிற்றம்பலம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே. 1
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 2
ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 3
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. 5
குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 6
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 8
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே. 9
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. 10
திருச்சிற்றம்பலம்
|
thiruchiRRampalam
mAsil vINaiyum mAlai mathiyamum
vIsu thenRalum vIngkiLa vEnilum
mUsu vaNtaRai poykAiyum pOnRathE
Isan eNththai iNaiyati NIzhalE. 1
Namachsi vAyavE njAnamung kalviyum
Namachsi vAyavE NAnaRi vichsaiyum
Namachsi vAyavE NANavin REththumE
Namachsi vAyavE NanneRi kAttumE. 2
ALA kArALA nArai ataiNththuyyAr
mILA vAtseythu meymmaiyuL NiRkilAr
thOLA thasurai yOthozhum parsevi
vALA mAyNththumaN NAkik kazhivarE. 3
Natalai vAzhvukoN tenseythir NANilIr
sutalai sErvathu soRpira mANamE
katalin Nanjsamu thuNtavar kAivittAl
utali nArkitaNth thUrmuni paNtamE. 4
pUkkAik koNtaran ponnati pORRilAr
NAkkAik koNtaran NAmam NavilkilAr
AkkAik kEyirai thEti alamaNththu
kAkkAik kEyirai yAkik kazhivarE. 5
kuRika Lumatai yALamung kOyilum
NeRika Lumavar NinRathOr NErmaiyum
aRiya Ayiram AraNam Othilum
poRiyi lIrmana menkol pukAthathE. 6
vAzhththa vAyum Ninaikka mataNenjsum
thAzhththach senniyuNth thaNththa thalaivanaich
sUzhththa mAmalar thUvith thuthiyAthE
vIzhththa vAvinai yEnNetung kAlamE. 7
ezhuthu pAvaiNal lArthiRam vittuNAn
thozhuthu pORRiNin REnaiyunj sUzhNththukoN
tuzhutha sAlvazhi yEyuzhu vAnporut
tizhuthai Nenjsami thenpatu kinRathE. 8
Nekku Nekku Ninaipavar NenjsuLE
pukku NiRkumpon nArsataip puNNiyan
pokka mikkavar pUvuNI rungkaNtu
Nakku NiRpa ravarthammai NANiyE. 9
viRakiR RIyinan pAliR patuNeypOl
maRaiya NinRuLan mAmaNich sOthiyAn
uRavu kOlNat tuNarvu kayiRRinAn
muRuka vAngkik kataiyamun niRkumE. 10
thiruchiRRampalam
|