சிவமயம்

பித்தாபிறை சூடீ பெருமானே அருளாளா

(சுந்தரர்)

piththApiRai sUtI perumAnE aruLALA

(suNththarar)
திருச்சிற்றம்பலம்

பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  1 

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்    
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்    
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  2 

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்    
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி    
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  3 

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ    
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ    
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  4 

பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய்    
ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா    
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே  5 

தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ    
எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய்    
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே  6 

ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்    
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்    
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  7 

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்    
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்    
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  8 

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா    
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே    
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.  9 

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால்    
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்    
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    
ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே.  10 
  
திருச்சிற்றம்பலம்

thiruchiRRampalam

piththApiRai sUtIperu mAnE aruLALA
eththAnmaRa vAthENinaik kinREnmanath thunnai
vaiththAypeNNaith thenpAl veNNey NallUr aruttuRaiyuL
aththAunak kALAyini allEnenal AmE.  1 

NAyEnpala NALumNinaip pinRimanath thunnaip    
pEyAyththiriNth theyththEnpeRa lAkAvaruL peRREn    
vEyArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
AyAunak kALAyini allEnenal AmE.  2 

mannEmaRa vAthENinaik kinREnmanath thunnaip    
ponnEmaNi thAnEvayi rammEporu thuNththi    
minnArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
annEunak kALAyini allEnenal AmE.  3 

mutiyEninip piRavEnpeRin mUvEnpeRRam UrthI    
kotiyEnpala poyyEuraip pEnaikkuRik koLNI    
setiyArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
atikELunak kALAyini allEnenal AmE.  4 

pAthampaNi vArkaLpeRum paNtammathu paNiyAy    
AthanporuL AnEnaRi villEn aruLALA    
thAthArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
AthIunak kALAyini allEnenal AmE  5 

thaNNArmathi sUtIthazhal pOlumthiru mEnI    
eNNArpuram mUnRumeri uNNaNakAi seythAy    
maNNArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
aNNAunak kALAyini allEnenal AmE  6 

UnAyuyir AnAyutal AnAyula kAnAy    
vAnAyNilan AnAykatal AnAymalai AnAy    
thEnArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
AnAyunak kALAyini allEnenal AmE.  7 

ERRArpuram mUnRumeri uNNachsilai thottAy    
thERRAthana solliththiri vEnOsekkar vAnIr    
ERRAypeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
ARRAyunak kALAyini allEnenal AmE.  8 

mazhuvALvalan ENththImaRai OthImangkAi pangkA    
thozhuvAravar thuyarAyina thIrththaluna thozhilE    
sezhuvArpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
azhakAunak kALAyini allEnenal AmE.  9 

kArUrpunal eythikkarai kalliththiraik kAiyAl    
pArUrpukazh eythiththikazh panmAmaNi uNththich    
sIrUrpeNNaith thenpAlveNNey NallUr aruttuRaiyuL    
ArUranem perumARkAL allEnenal AmE.  10 
  
thiruchiRRampalam
     
திரு திருத்தணி சுவாமிநாதன் குரலில்:

Back to வழிபாட்டுப் பாடல்கள்