"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய் யுமாறே" என்பது திருமூலர் வாக்கு. அவரின் அடியொற்றி ...
சங்கம் மற்றும் பக்தி இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியல் முறைகளை, சிறிதளவேனும் தெரிந்து பயன் பெறலாம் என்ற நோக்கத்தில் சிலபல பாடல்களைப் பதிவேற்றியிருக்கிறோம். பாடல்கள் பதிவேற்றம் தொடர்ந்து நடைபெறும்.
ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு ஒரு முறை, அதே தொகுப்பில் இருந்து மற்றொரு பாடலுடன், பாடல் பக்கம் புதுப்பிக்கப் பெறும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கணினி திரைகள் கொண்டு வேலை செய்வது என்பது வழக்கமாகிவிட்ட இன்றைய சூழலில், ஒரு திரையில் இந்தப் பாடல்களை ஓடவிட்டுப் பார்க்கலாம்.
அவ்வப்போது ஒரு புதிய பாடலைப் படித்த அனுபவம் ஏற்படும்.
எதற்கெல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கிறதோ, அதுவும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது - திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், ஆத்திசூடி, இவற்றிற்கு ஆங்கில மொழி பெயர்ப்பு இங்கு காணலாம்.
பாடல்கள் பக்கத்தில் தேடல் பொறியும் இருக்கின்றது. ஓரிரு சொற்களைத் தேடல் கட்டத்தில் இட்டு, தேடு பொத்தானை அழுத்த, அவை இடம்பெற்ற பாடல்கள் ஒரு புதிய பக்கத்தில் தரப்படும்.
பாடல்கள் ஒலிபெயர்ப்பும் செய்ய இங்கு வசதி உள்ளது. ஓரிரு பாடல்களை முதல் கட்டத்தில் இட்டு, Transliterate பொத்தானை அழுத்த, அவை அடுத்த கட்டத்தில் ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்பட்டுத் தரப்படும். ஒலிபெயர்ப்புக்கு Project Madurai தளத்தின் குறிகளை ஒட்டி ஆங்கில எழுத்துகள் அமைக்கப்பட்டுள்ளது இங்கு! eg. அ=a, ஆ=A, க=ka, கா=kA, கி=ki, கீ=kI.
மேலும் இலக்கண ஆர்வலர்களுக்கு, வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற இலக்கணக் கவிதைகள் புனைவோருக்கு, தங்கள் பாடல்களை அசை பிரித்து, எழுத்து எண்ணிப் பார்த்துக் கொள்ளவும் இந்த இணைய தளத்தில் இயலும்.