ஓவியம் - நீர்வண்ணம் | வாழ்வியல்

Shan
Img. 17 / 30 - தேநீரகம்

Photo to Painting - Watercolor Brush Pens

உலகம் தழுவி நமது வாழ்க்கை முறையில் இந்தத் தேநீர்க் கடைகள் முக்கிய அங்கம் வகிப்பவை. ஊருக்கு ஏற்ப, நாட்டிற்கேற்ப அதன் தோற்றப்பாடுகள் மாறுபடும். அப்படி எங்களூர் கிராமியத் தேநீரகம் ஒன்று. ஒருவரின் நாள் துவங்கும் இடமே இவ்விடங்கள் தான்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் என தேநீர் ஆத்தும் master. அதற்குக் காத்திருக்கும் வாடிக்கையாளர். சுற்றுப்புறச் சுவர்களில் அலங்காரம், உத்தரத்தில் சுவாமி படங்கள், மற்றும் கடையின் பல அங்கங்கள்.

இவை எல்லாம் கொண்ட தேநீர்க் கடையின் asthetics சற்றும் குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. சில ஆண்டுகள் முன்னர் தீட்டிய படம்.

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
01-Feb-2024

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows