ஓவியம் - நீர்வண்ணம் | உணவு

Shan
Img. 18 / 30 - Me the chef :)

Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁

வீட்டில் மனைவி சமையலா, கணவன் சமையலா என்று நம்ம ஊரு தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம்- பட்டிமன்றங்களும், விவாத மேடைகளும் போட்டி போட்டு நடத்திக் கொண்டிருக்க, விடை நமக்கெல்லோருக்கும் தெரியும் தானே?!

இன்னிக்கு dinnerக்கு சப்பாத்தி readymade வாங்கினது இருக்கு. தொட்டுக்க என்ன பண்ணலாம்?? youtubeல இது இருந்தாப் போதும், இத்தனை நிமிடங்களில், இது readyனு captionகள் ஓட tierd ஆகிக் கடைசியில் நம்ம standard உருளை பச்சை மசாலா ready.

சப்பாத்தி சூடு செய்து தட்டில் அடுக்கி, தொட்டுக்க வைத்து, தட்டைத் தூக்கினால் அதுவே அழகா இருந்தது. Intentionalஆ எல்லாம் பன்னல. டக்குனு கைபேசியில் ஒரு பிடி, பின்னர் சப்பாத்தியை ஒரு பிடி, மற்றும் பின்னர் தூரிகையில் ஒரு பிடி.

உங்கள் பசியைத் தூண்டும் விதத்திற்கு கொஞ்சமாவது அருகில் வந்தால் அதனை ஓவியமாகக் கொண்டு வந்தததில் மட்டற்ற மகிழ்ச்சி.

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
02-Feb-2024

Ref
Reference image
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows