Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
நிலப்பரப்பு ஓவியமாக்குவதில் எப்பவும் சவால் தான். அதுவும் நீர்வண்ணம் அடுத்த சவால். இலையுதிர் காலத்து வண்ண மலர்களும், மலைகளும் கொண்ட ஒரு படத்தை எடுத்து சவாலே சமாளி என்று தொடங்கியாச்சு.
தூரத்தில் போர்வையாக மலைகளும், அதன் முன்னர் மர அடுக்குகளும், அவை போர்த்திய வண்ண மலர்களும், எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் நீரோட்டமும் என ஒரு அற்புதக் காட்சி. எப்படி இதனை எளிதாக்கலாம் என்று குறைந்த அளவு details மட்டும் கோடிட்டு, குறைந்த வண்ணங்களில் தீட்டி முடிச்சாச்சு. அதன் aesthetics குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
02-Feb-2024