தமிழ் செய்வோம்
முதுமொழிக் காஞ்சி
Muthumozhi Kaanji
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
1 ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
2 காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
3 மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
4 வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
5 இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
6 நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
7 குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
8 கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
9 செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10 முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
முதுமொழிக் காஞ்சி > சிறந்த பத்து > பாடல்: 1 தேடுக This page reloads every 3 minutes with new random verse.
Next Random முழுதும் முன் முகப்பு Copy URL