முதுமொழிக் காஞ்சி | Muthumozhi Kaanji

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
11 பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
12 ஈரம் உடைமை ஈகையின் அறிப
13 சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
14 கற்றது உடைமை காட்சியின் அறிப
15 ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
16 சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
17 குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
18 சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
19 அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
20 சீருடை யாண்மை செய்கையின் அறிப

முதுமொழிக் காஞ்சி > அறிவுப்பத்து > பாடல்: 2

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, 18-May-2024 12:34:28 AM