தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

திருமகளினும் அழகியிவள்

மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
 நிகர்ஒவ்வா மதியே!மானே!
செய்வடிவைச், சிற்றிடையைத், திருநகையை,
 வேய்த்தோளைத் தெய்வமாக
இவ்வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ?
 யான்அறியேன்! உண்மையாகக்
கைபடியத் திருமகளைப் படைத்து,இவளைப்
 படைத்தனன்நல் கமலத்தோனே!

அம்பிகாபதி


தனிப்பாடல் திரட்டு > கலை, காதல் > பாடல்: 17

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sat, 18-May-2024 12:30:11 AM