தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
கயவர்களைப் பாடி இளைக்கின்றேன்!வணக்கம்வரும் சிலநேரம், குமரகண்ட
வலிப்புவரும் சிலநேரம், வலியச்செய்யக்
கணக்குவரும் சிலநேரம், வேட்டைநாய்போல்
கடிக்கவரும் சிலநேரம், கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப் பாடிப்பாடி
எத்தனைநாள் திரிந்துதிரிந்து இளைப்பேனையா!
குணக்கடலே! அருள்கடலே! அசுரரான
குரைக்கடலை வென்றபரங் குன்றுளானே!
இராமச்சந்திர கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 25 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL