தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
தன் குற்றம்கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்;
காடுஎறியு மறவனைநாடு ஆள்வாய் என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
போர்முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல்தோளை;
வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை'என்றான்;
யானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே!
இராமச்சந்திர கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > சித்திர கவி > பாடல்: 26 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL