தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

பிறவிப் பெருங்கடல் நீந்துவது அறியேனே!

உரையேன் உன்பேரை; உணரேன்நின் சீரை; உனைக் கருதிக்
கரையேன்; எவ்வாறு கடப்பேன்? வினையைக் கடந்தகுண
வரையே! அருள்பெரு வாரிதியே! மதுரா புரிக்குத்
துரையே! அழகிய சொக்கே! தமிழ்தந்த சுந்தரமே!

பலபட்டை சொக்கநாதப் புலவர்


தனிப்பாடல் திரட்டு > பிறவி, பிணி, வினை > பாடல்: 34

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Thu, Jan 16, 2025