தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

இவரை எப்படிப் பாடுவேன்!

கல்லடிக்கும் உளியிரண்டு காதடிக்குள்
 அடிப்பதெனக், கவிதை கேட்டுப்
பல்லடிக்குக் கிடுகிடெனப் பறையடிக்கும்
 நெஞ்சர்தமைப் பாடுவேனோ?
வில்லடிக்கும், பிரம்படிக்கும், கல்லடிக்கும்,
 விரும்பிநின்ற மெய்யன்ஈன்ற
செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க
 அலையடிக்கும் செந்திலானே!

படிக்காசுத் தம்பிரான்


தனிப்பாடல் திரட்டு > ஈயார் > பாடல்: 35

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sat, 18-May-2024 01:35:50 AM