பதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. | அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து. |
பொருள் : பதிப்பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போலப் பதிப்பொருள் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும். எனவே பதியாகிய இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும். |