திருவருட்பயன் | Thiruvarutpayan |
பதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல் கூடும் இறை சத்தி கொளல். | நீடு மிருவினைகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல். |
பொருள் : முன்னே செய்து கொண்ட இருவினைகளின் பயன்களாய் வருகின்ற இன்பத் துன்பங்கள் ஆன்ம அறிவில் சமமாய் உணரப்படும் நிலை வருங்காலத்தில் அந்த ஆன்மா இறைவனது திருவருளைப் பெறுதல் கூடும். |