பதம் பிரித்து | உள்ளபடியே |
---|---|
ஏன்ற வினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை தோன்றில் அருளே சுடும். | ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினை தோன்றி லருளே சுடும். |
பொருள் : இப்பிறப்பில் நுகர்தற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்த வினைகள் சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு இருக்கும் வரையில் இருந்து, அவரால் பற்றின்றி நுகரப்பட்டு இவ்வுடம்பு நீங்குங் காலத்தில் முடிந்தொழியும். அவர் பிராரத்த வினையை நுகரும்போது புது வினையாகிய ஆகாமியம் தோன்றுமாயின் அதனைத் திருவருளே எரித்துவிடும். |