பதிற்றுப்பத்து | Pathitrup paththu

பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

பாட்டு - 53

வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின் 5
செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்
கோள்வல் முதலைய *குண்டுகண் அகழி*
வான்உற ஓங்கிய வளைந்துசெய் பு஡஢சை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி 10
நின்னின் தந்த மன்எயில் அல்லது
முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்
எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக் 15
குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத் 20
தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே.

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: குண்டுகண் அகழி

பதிற்றுப்பத்து > ஆறாம் பத்து > பாடல்: 53

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, 22-Feb-2024 08:42:32 AM