தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே!- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை,
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் 5
மரம்செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பிடி உணீஇயர், அம்குழை,
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே- தோழி!
சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல், 10
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து,
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை,
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம்பா ராட்டிய காலையும் உள்ளார், 15
வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச், சேய்ந்நாட்டு
அருஞ்செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே! 18
அகநானுறு > 1. களிற்றியாணை நிரை > பாடல்: 59 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL