அகநானுறு | Aganaanooru

வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,
தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப், 5
பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
வெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,
வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,
கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை
மருண்டமான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து 10
திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
நின்வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற் 15
கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே! 17

அகநானுறு > 1. களிற்றியாணை நிரை > பாடல்: 74

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, 10-Sep-2024 04:50:47 PM