தமிழ் செய்வோம்
புறநானூறு
Purananooru
1. இறைவனின் திருவுள்ளம்! பாடியவர்:பெருந்தேவனார். பாடப்பட்டோன்: இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீரறவு அறியாக் கரகத்துத், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
புறநானூறு > பாடல்: 1
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL